உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் -38

82. இரண்டும் உரையாமல் ஏகுவது ஏன்?

இடைச்சியார்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

சொல்லாடின் உமக்கிரண்டு பசுவே உண்டு; சுமந்திடுபொற் கலசமுமத் துணையாம்; ஈதும் அல்லாமல் இடையின்மிக இளைத்துப் போனீ

ராயிருந்தும் இடைமதியோ அகந்தை தானோ புல்லாரென் பணிதொடையார் அருணை நாட்டிற் பொதுவர்குல மங்கையரே புலிமேற் கண்டோர் எல்லாரும் தனித்தனியே டெடுத்தக் காலும்

இரண்டுமுரை யாமலகன் றேகு வீரே.

நேர்ப்பொருள் ஒன்றும் குறிப்புப் பொருள் ஒன்றும் அமையப் பெற்றது இச்செய்யுள்.

(பொ-ரை ) அறுகம்புல், ஆத்திப்பூ, எலும்பு ஆகியவற்றை அழகிய மாலையாக அணிந்த சிவபெருமானது அண்ணா மலையில் உள்ள ஆயர்குலப் பெண்களே, சொல்வதாயின் உங்களுக்கு இரண்டு பசுக்களே உண்டு. (இரண்டு பசுமையான மூங்கில்போன்ற தோள்கள் உண்டு) நீங்கள் சுமக்கக் கூடிய பாற் கலயங்களும் அவ்விரண்டேயாம். (தனங்களும் இரண்டேயாம்) இதுவும் அல்லாமல் இடைக்காலத்தில் மிகவும் மெலிந்து போய்விட்டீர் (இடை மிகத் தேய்ந்துள்ளீர்.) இவ்வாறாக இருந்தும் பின்புத்தியோ (இடையரினப் புத்தியோ) செருக்கோ, நிலத்தில் பார்த்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக நீங்கள் கொண்டு வந்த தயிரில் ஆடையை எடுத்துக்கொண்டு போன போதும் (தலையில் வைத்துள்ள பூக்களை எடுத்துக் கொண்டு போனபோதும்) உடன்பட்டுக் கூறுதல், மறுத்துக் கூறுதல் என்னும் இரண்டுள் ஒன்றும் கூறாமல் செல்வீர். (இத் தன்மை இருந்தவாறு என்னே!)

(வி-ரை) தெருவில் பால் தயிர் விற்கும் ஆயர்குல நங்கை மேல் ஆசைகொண்டானொருவன் தன் ஆசை வெளிப்படக் கூறுவதாகச் செய்யுள் செய்வது இடைச்சியார் என்பதாகும். புல்லாரென்பணி தொடையர் என்பதை 'புல் ஆர் என்பு அணி