உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

147

தொடையர்' எனப் பிரித்துப் பொருள் காண்க. 'புல்லார் என்பு' 'பகைவரின் எலும்பு' எனக் கொள்வாரும் உளர். பொதுவர் ஆயர்; இடையர்; குறிஞ்சி மருதம் இரண்டற்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தவர் ஆகலின் இடையர் என்றும், குறிஞ்சிக்கும் முல்லைக்கும் பொதுவானவர் ஆகலின் பொதுவர் என்றும், ஆக்களை மேய்த்துண்டு ஆப் பயன்கொள்வார் ஆகலின் ஆயர் என்றும் பெயர் பெற்றனர் என்க. 'பசுவேயுண்டு' என்பது 'பசுவே உண்டு' எனவும், 'பசு வேய் உண்டு' எனவும் பிரித்துப் பொருள் கொள்ளப் பெற்றன. வேய் - மூங்கில். ஏடு பாலாடையும், பூவிதழும். 'கலசம்' 'இடை' என்பன இருபொருள் தருதல் வெளிப்படை.

83. மூவினம்

இதுவும் இடைச்சியார்

கட்டளைக் கலித்துறை

-

வீரனை நல்கி மகமூறு செய்த விடைக்கொடியார் காரணி கண்டர் அருணா சலத்திற் கலசங்கொண்டு மோரது கூறும் இடையின மானுக்கு முண்டகம்போல் ஈரடி மெல்லினம் வல்லின மாகும் இருதனமே.

(82)

(பொ-ரை) வீரபத்திரனைப் படைத்துத் தக்கன் செய்த வேள்வியை அழித்த இடபக் கொடியினரும், கரிய அழகிய கண்டத்தினருமாகிய சிவபெருமானது அண்ணாமலையில் மோர்க்குடம் கொண்டு விலை கூறும் இடைக்குலப் பெண்ணுக்குத் தாமரை மலர் போன்ற இரண்டு அடிகளும் மெல்லிய தன்மை யினவாம்; இரு தனங்களும் சூதுக் காய்களின் தன்மையினவாம்.

(வி-ரை) தக்கன் செருக்குற்றுச் செய்த வேள்வியை அழிப்பதற்காக வீரபத்திரனைத் தோற்றுவித்தார் இறைவரா கலின் "வீரனை...கொடியார்" என்றார்; இடையினமான் என்பது இடைப்பெண் என்பதையும், மெல்லினம் என்பது மெல்லிய தன்மையையும் வல்லினம் என்பது வல்லுக் காய்களின் தன்மையையும் குறித்தன ஆயினும், இலக்கணத்தில் பயிலும் வல்லின, மெல்லின, இடையினங்களை நயமுற எடுத்தாண்டு உவகையூட்டினார்.

(83)