உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 86. கண்ணாலமும் மணக்கோலமும்

நேரிசை வெண்பா

அண்ணா மலையார் அருணையனை யீரும்மைக் கண்ணாலம் செய்தான் கமலத்தோன் - எண்ணா திணைக்கோலம் செய்தமுலை ஏந்திழையீர்! என்னை மணக்கோலஞ் செய்தான் மதன்.

(பொ-ரை) அண்ணாமலை இறைவரது அருணைப்பதி போன்றவரே, விளைவதை எண்ணிப் பார்க்காமல் இரண்டு கொங்கைகளையும் தொய்யில் முதலியவற்றால் அழகு செய்த தலைவியரே, உம்மை நான்முகன் திருமணம் செய்து கொண்டான்; மன்மதன் என்னை மணக்கோலம் கொள்ளச் செய்தான்.

(வி-ரை) தலைவியின் எழில்நலம் கண்ட தலைவன் கூற்று இது. இரண்டாம் நான்காம் அடிகளில் சிலேடை நயம் அமைந் துள்ளது. கமலத்தோன் கண்ணாலம் செய்தான் என்பதில் கண்ணாலம் என்பது திருமணம் என்னும் பொருளையும், கண் ஆலம் செய்தான் எனப் பிரிந்து கண்ணை நஞ்சாகப் படைத்தான் என்னும் பொருளையும் தரும். மதன் மணக்கோலஞ் செய்தான் என்பதில் மணக்கோலஞ் செய்தான் என்பது திருமணக்கோலம் செய்தான் என்னும் பொருளையும், 'மணக்கோல் அஞ்சு எய்தான்' எனப் பிரிந்து மணமிக்க மலரம்புகள் ஐந்து எய்தான் என்னும் பொருளையும் தரும்.(86)

87. குழலிருந்தால் எப்படி வாட்டுவீரோ?

கொற்றியார்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

மழலைமொழி இசையாலும் கொடும்பார்வை அதனாலும்

மயக்க மாகிச்

சுழலும்விடர் அரவமெலாம் படமெடுத்து முன்னாடத்

தோன்றி னீரே,

அழலுருவம் அணிகரத்தர் அருணகிரி வளநாட்டில்

அளிவந் தூதும்

குழலொருசற் றுண்டாயின் எப்படியோ வாட்டிடுவீர் கொற்றி யாரே!