உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

151

(பொ-ரை) தீயின் வடிவாகிய மழுப்படையைக் கொண்ட கையினராகிய அண்ணாமலையாரின் வளமையான நாட்டில் வாழும் கொற்றியாரே, உம் மழலைச் சொல்லின் இனிமை யாலும், மயக்கமூட்டும் கொடிய பார்வையாலும் வெடிப்பில் உறையும் பாம்பெல்லாம் சுழன்று படமெடுத்து முன்னே ஆடத்தோன்றினீர்; உமக்கு வண்டுகள் வந்து இசை பாடத்தக்க கூந்தலும் ஒரு சிறிது உண்டானால் எவ்வாறு வாட்டுவீரோ? அறியேம்.

(வி-ரை) தலைமுண்டித்து, வைணவக் கோலம் கொண்டு, சூலம் முதலியன ஏந்தி வீதியிற் பிச்சைக்கு வருகின்ற மகளிரைக் கண்டு காமுகன் ஒருவன் கூறுவதாகச் செய்யுள் செய்வது கொற்றியார் என்பதாம். இதன் இரண்டாம் அடியில் இரட்டுறல் அமைந்துள்ளது. "சுற்றித்திரியும் காமுகர் உம் சிலம்பு முதல் எல்லாவற்றையும் படமாக எழுதி உம் முன்னே மடலேறிவரத் தோன்றினீரே" என்பது அதன் பொருளாம். விடர்-வெடிப்பு, பாம்பின் படம், காமுகர்; அரவம் - பாம்பு, சிலம்பு; படம் ஓவியம்; 'முன்னாட என்பது முன் ஆட, முன் நாட' எனப் பிரிந்து முன்னே ஆடவும், முன்னே வரவும் எனப் பொருள் தரும், அளி -வண்டு.

-

கொற்றியார் தலைமுண்டிதம் உடையவர் என்பது 'அளி வந்தூதும் குழலொரு சற்றுண்டாயின்' என்பதால் விளங்கும். அவர்கள் பாம்பினை ஆட்டுவதும் உண்டு என்பது, 'சுழலும் விடர் அரவமெலாம் படமெடுத்து முன்னாட' என்பதால் புலப்படும்.

(87)

88. பிறைநிலவால் பேரிருள் மறைந்தது

இதுவும் கொற்றியார்

கொச்சகக் கலிப்பா

ஆரிதழி சூடும் அருணேசர் நன்னாட்டில் வாரிறுகு கொங்கை மலைசுமக்கும் கொற்றீரே! பேரிருள்போல் நாமப் பிறைநிலவு கண்டொளிக்கக்

கூரியகண் ணில்லார் குழல்குறைந்தார் என்பாரே.

(பொ-ரை) ஆத்தி மலரும் கொன்றை மலரும் சூடும் அண்ணாமலையாரின் நல்ல நாட்டில், கச்சினால் இறுக்கிக் கட்டப்பெற்ற மார்புகளாகிய மலைகளைச் சுமந்து திரியும்