உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

கொற்றியீரே, கப்பிக்கொண்ட இருளைப்போன்ற நும் கூந்தல் நாமம் இடப்பெற்ற பிறை போன்ற நெற்றியின் ஒளிகண்டு மறைந்து போகவும், கூரிய பார்வை இல்லாதவர் நும்மைக் 'கூந்தல் இல்லாதவர்' என்று கூறுகின்றார்.

(வி-ரை) ஒளியால் இருள் மறைதல் உண்மையால், நெற்றிப் பிறை ஒளியால் கூந்தல் இருள் மறைந்தது என்றார். இவ்வாறாகவும் கூந்தல் இல்லார் என்று கூறுவார் பார்வை இருந்தவாறு என்னே என்று காமுகன் உரைத்தானாம். கொற்றியார் நாமம் தரித் திருத்தலும் தலைமுண்டி தம் செய்திருத்தலும் இப்பாட்டாலும் புலப்படும்.வார் -கச்சு; கொற்றீர் - விளி.

89. சோணாசலரைப் பேணுக

வஞ்சித்துறை

பாணார் மொழிநிறை

(88)

சோணா சலரடி

பேணா தவனுறும்

மாணா நரகமே

(பொ-ரை) இசைநலங் கனிந்த மறைகளில் நிறைந்துள்ள வராகிய அண்ணாமலையாரின் திருவடிகளைப் பேணி வழிபாடு செய்யாதவர் கீழான நரகத்தையே அடைவர்.

(வி-ரை) பாண்

இசைப்பாடல்; மொழி - திருமறை;

மாணா -சிறப்பு இல்லாத; கீழான்.

இது

து.

அண்ணாமலையாரின் அடியடைந்தார் பேறு உரைத்தது

90. அருணையார் அன்பர் அடையும் நலம்

வஞ்சி விருத்தம்

நரக வாதையில் வன்பிறார்

தரணி மீதொரு கொன்பெறார்

(89)

சுரர்உ லோகமும் இன்புறார்

அருணை நாயகர் அன்பறார்.

(பொ-ரை) அண்ணாமலை

இறைவரிடம் அன்பு

நீங்காதவர், இவ்வுலக வாழ்வில் எந்த ஓர் அச்சமும் அடையார்; நரகத்துயரில் பட்டுத் தம் வலிமை இழவார்; தேவர் உலகத்தை யடைந்து இன்பமும் எய்தார்; (வீடுபேறு அடைவர்)