உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம் *

-

153

(வி-ரை) அன்பு அறார் - அன்பு அகலாதவர்; கொன் அச்சம்; வன்பு இறார் வலிமை இழவார்; சுரர் உலகு தேவருலகு. தேவருலகும் அடையாரோ எனின் அடைந்தார் மீண்டும் பிறப்பராகலின் அந்நிலை நடந்து வீடுபேறு எய்துவார் இவர் என்றவாறு. வீடுபேறு பெற்றார் மீண்டும் பிறவித்துயர் அடையார் ஆகலின். உலகம் 'உலோகம்' என யாப்புறவு நோக்கி நின்றது.

91. தாள் பூ பெறலாம்

வேற்றொலி வேண்டுறை

அருணைஅதி ருங்கழலர் ஆறணிசெஞ் சடையாளர் அரிவை பாகர்

கருணைநெடும் கடலான பெருமானார் தாள்தொழுதார் கதியை நாடின்

மரணமிலா இமையவர்தம் வானுலகம் அன்றே

பொருள்நிறையும் நான்மறையோர் புகலுமத்தாள் பூவே.

(90)

(பொ-ரை) திருவண்ணாமலையில் உறையும் அதிருங் கழலர் என்னும் பெயருடையவரும் கங்கையாற்றை அணிந்த சிவந்த சடையினரும் உமை ஒரு பாகரும் பேரருள் பெருங் கடலாக விளங்கும் பெருமானாரும் ஆகிய சிவபெருமானின் திருவடியைத் தொழுதவர் அடையும் பேற்றை ஆராய்ந்தால், அஃது இறப்பில்லாத தேவர்களின் விண்ணுலகம் அன்றாம்; பொருள் நிறைந்த நான்மறைகளையும் தேர்ந்து தெளிந்தவர் கூறும் அந்தத் திருவடித் தாமரைப் பூவே யாகும்.

(வி-ரை) 'தாள்தொழுதார் தாள் பூ அடைவர்' என முடிக்க; மேலைப் பாடலில் கூறிய செய்தியை மீண்டும் வலியுறுத்தினார். திருவடிப் பேறு அடைதலே, 'அந்தமில் இன்பத்து அழிவில் வீடும்' 'பிறந்திறவாப் பெற்றிமையும்' ஒருங்கே சேர்க்கும் ஆதலால். தாள்பூ - உருவகம். பாடலின் முன்னிரண்டு அடிகளும் பின்னிரண்டு அடிகளும் வேறுவேறு அமைப்பில் வந்துள்ளமை அறிக. இது வேற்றொலி வெண் துறையாம். வெண்பாவினம் சார்ந்தது.

(91)