உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்-38 92. உண்டு! உண்டு! இரங்கல்

விருத்தக் கலித்துறை

பூவுண்ட விடையாளர் அருணாச லத்தீசர்

பொன்மேருவாய்ப்

பாவுண்ட புகழாளர், 'பிரியேன்' எனச்சொன்ன பருவத்திலே,

காவுண்டு குயிலுண்டு மயிலுண்டு கிளியுண்டு

கனிதூவுதே

மாவுண்டு குருகுண்டு திருகுண்ட மனனுண்டு

மறவாமலே.

டபமாக

(பொ-ரை) மண்ணையுண்ட திருமாலை உடையவரும், அண்ணாமலை இறைவரும் ஆகிய சிவபெருமானின் அழகிய மேருமலை போன்ற அருணையில் பரவிய புகழுடைய வராகிய தலைவர் நின்னைப் பிரியேன் என்று சொன்ன பொழுதில் சான்றாகச் சோலையுண்டு; குயில் உண்டு; மயில் உண்டு; கிளியுண்டு; கனிகளைச் சொரியும் தேமா மரமுண்டு; அன்ன முண்டு; மறக்காமல் என்னோடு மாறுபட்ட மனமுமுண்டு.

(வி-ரை) திருமாலே விடையாயினார் என்பாராகலின். 'பூவுண்ட விடையாளர்' என்றார். அவர் பூவுண்டது கண்ணன் தோற்றரவில் என்க. பாவுண்ட -பரவிய; காசோலை; குருகு - அன்னம்; திருகுண்ட -மாறுபட்ட; மேருவாய்ப் பாவுண்ட மேருமலை போலப் பரவிய (புகழாளர்) என்றுமாம்.

(92)

93. கையேட்டை வாங்கி மையழித்தல் தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு

நின்றது கலிவிருத்தம்

வாங்குவில் ஏர்நுதல் வயங்கு மாதரீர்

ஈங்கிவள் ஒருவர்கை யேட்டை வாங்கினளால் ஆங்கடு அணிந்தவர் அருணை நாட்டிலே நீங்கள்மை யழிப்பது நீதி யல்லவே.