உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம்-38

(வி-ரை) கடைப்பட்டது என்பதை அம்பும் கடைப்பட்டது; வாரிதியும் கடைப்பட்டது; கள்ளக் கயலும் கடைப்பட்டது; ராசியின் மீனும் கடைப்பட்டது எனத் தனித்தனி கூட்டி இயைக்க, கண்களுக்கு அம்பு, கடல், கயல், மீன் ஆகியவற்றை உவமை கூறுவது மரபு ஆகலின், அவ்வுவமைகள் கடைப்பட்ட வகையை நயமாக உரைத்தார். அம்பு, கொல்லரால் கடையப் பட்டது; கடல் தேவராலும் அசுரராலும் கடையப்பட்டது; கயல் விலை கூறுவதற்காகக் கடைக்குக் கொண்டுவரப்பட்டது; இராசி மீன், இராசி வரிசையில் கடைசிப்பட்டது; ஆதலால் இந்நான்கும் பேதை நல்லாளின் கண்ணுக்குத் தோற்றுக் கடைப் பட்டன என்றார். அள்ளி அருந்தத் தகாத கடலும் உண்டாகலின் பாற்கடலை 'அள்ளல்' கடல் என்றார்; சேறு என்பதினும் இது சிறக்கும்; கள்ளம் கருமை; கயலுள் கருங்கயலைக் கண்ணுக்கு உவமை கூறுவராகலின் கள்ளக் கயல் என்றது கருங்கயலை என்க. வஞ்சமான கயல் என்பதினும் இப்பொருள் தகவாம் என்க.

-

கடைப்பட்டது என்னும் ஈற்றுச் சொல் பல சொற் களொடும் இயைந்து பொருள் தந்ததாகலின் இது விளக்கணியாம்; கடைவிளக்கு. இஃது என்க.

95. மயல்கூரக் கயல் கூறுவார்

வலைச்சியார்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

தேவியிடம் அகலாத அருணகிரி வளநாட்டில்

தெருக்கள் தோறும்

மாவிரத முனிவரெலாம் மயல்கூரக் கயல்கூறும்

வலைச்சி யாரே!

காவிதிகழ் வாவியிலே மீன்பிடித்து வருவோரைக்

கண்டோம்; கண்டோர்

ஆவியெலாம் பிடித்திழுக்கும் உமைப்போல ஒருவரைக்கண் டறிந்தி லோமே.

(94)

(பொ-ரை) உமையம்மை இடப்பாகத்திலிருந்து விலகாத அண்ணாமலையாரின் வளமான நாட்டில், தெருக்கள் தோறும் சீரிய தவமுனிவர் எல்லாரும் மையல் எய்துமாறு கயல்மீன் விலைகூறும் வலைச்சிப் பெண்டிரே, குவளைமலர் விளங்கும் குளத்திலே மீன் பிடித்து வருகின்றவரைக் கண்டுள்ளோம்.