உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

157

ஆனால் காண்பவர் உயிரையெல்லாம் பிடித்து இழுக்கும் உங்களைப் போன்ற ஒருவரை இதுவரை யாம் கண்டறியோம்.

(வி-ரை) மாவிரதியரே மயல்கூர என்றமையால் மற்றை யோர் மயலைச் சொல்லவேண்டியதில்லை என்பதாம். காவி குவளை; வாவி - குளம்; "மீனைப் பிடித்திழுப்பார் உளர்; உம்மைப்போல் கண்டோர் உயிரைப் பிடித்திழுப்பாரைக் கண்டிலோம்" என்றான். ஆவியைக் கவிர்தல் என்னாமல் 'ஆவி பிடித்திழுத்தல்' என்றது தொழில் நயம் கருதிக் கூறியது.

வலைச்சியார் என்பது மீன் விற்கும் வலையர் மகளைக் கண்டு காமுற்றான் ஒருவன், அம் மகளை முன்னிலைப்படுத்தி உரைப்பதாகச் செய்யுள் செய்தல்.

தேவி இடம் அகலாமை : மிருங்கி முனிவர் இறைவனை அன்றி இறைவியை வழிபடாக் கொள்கை யழுத்தமிக்கவர். அதனால் இறைவி, இறைவனை வேண்டி அவனுடலுடன் ஒரு கூறாக அமைந்தாள். முனிவர் வழிபாடும் ஏற்றாள். ஆதலால் இறைவன் உமையொரு பாகன் ஆனான்.

96.

ஒருவராலும் இருவராலும்

வலைச்சியார்

நேரிசை வெண்பா

மேலா றணிசடையார் வீறருணை வீதியிலே

மாலாக வந்த வலைச்சியரே - காலாம்

(95)

இருவரா லும்காட்டும் யான்பிடிக்கக்; காதல்

ஒருவரா லும்தீரு மோ?

(பொ-ரை) வானகங்கையைச் சடையில்

அணிந்த

சிவனாரின் பெருமைமிக்க அருணைவீதியில் கண்டோர் மயக்கமுற வந்த வலையப் பெண்டிரே, என் ஆசை ஒரு வரால் மீனாலும் தீர்ந்துவிடுமோ? கால்வாயிலுள்ளதாம் இரண்டு வரால்களையும் யான் பிடிக்குமாறு காட்டும்.

(வி-ரை) மால் - மயக்கம், 'ஒருவராலும்' என்பது ஒரு வராலும் என்னும் பொருளும், உம்மையன்றி வேறு 'ஒருவராலும்' என்னும் பொருளும் தந்தது. கால் என்பது கால்வாயையும், காலையும் காட்டியது."காதல் ஒருவராலும் தீராது; கால்கள் என்னும் இரண்டு வரால்களையும் யான் பிடிக்குமாறு காட்டும்" என்று உரைத்தானாம்.

(96)