உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

97. உயிரின் ஆன ஒரு கேள்வன் செவிலி நற்றாயைத் தேற்றல் எண்சீர் ஆசிரியவிருத்தம்

ஒருவ ராலுமணு காத நாளிலே

உயிரி னானவொரு கேள்வன் ஆசையால்

மருவி னாலுமென தாகும்; நாளையே

வழிகள் தோறுமினி நாடி மீளலே

கருணை நீதிமனை வேணு மாதுடன்

கடல்கள் ஏழுமலை ஏழும் ஏழுமா

அருணர் சூழுமுல கேழும் ஏழுமா

அருணை நாதர்சர பாவ தாரமே.

(பொ-ரை) ஒருவராலும் அணுகிச் செல்லமுடியாத நள்ளிரவுப் பொழுதிலே தன் உயிர்போன்ற ஒப்பற்ற தலைவன் ஆசையால் கூடிச் சென்றாலும், நாளைக்கே மணம்பூண்டு அருளும் அறமும் விளங்கும் மனையறம் பேணுவாள்; அன்றியும் ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு குதிரைகளையுடைய கதிரோன் சூழ்ந்துவரும் பதினான்கு உலகங்களுமாகிய அண்ணாமலையாரின், சரபத் தோற்றரவு போல இருவரும் இ ணைந்து வாழ்வர். ஆதலால் வழிகள் தோறும் இனித் தேடிச் சென்று திரும்புவதால் ஆகும் பயன் என்ன?

(வி-ரை) உடன்போக்குக் கொண்ட தலைவியை நினைந்து வருந்திய நற்றாயைச் செவிலி தேற்றுதலாக அமைந்தது இச் செய்யுள். தலைவி இனிய இல்லறம் நடத்துவள் ; ஈருடல் ஓருயிராக வாழ்வள் எனத் தெளிவித்தாள். சரபம் என்பது இருதலை களையும் எண்கால்களையும் கொண்டதொரு பறவை. இரு தலைக்கு ஓருடல் அமைந்த சரபம் போலத் தலைவனும் தலைவியும் வாழ்வர் என்பதை 'அருணைநாதர் சரபாவதாரம்' கூறுமுகத்தால் விளக்கினார். அருணைநாதர் எல்லாமும் ஆனவர் என்பதைக் 'கடல்கள் ஏழும் அருணைநாதர்' என்பதால் தெளிவித்தார். கேள்வன் - தலைவன்; மருவுதல் கூடுதல்; ஏழு மா அருணர் -ஏழு குதிரைகளையுடைய கதிரோன். சரபம் பற்றி முன்னரும் குறித்தார் (49). தோற்றரவுஅவதாரம். (97)

-