உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

99. புதுமையினும் அருமை

தோழி, தலைமகள் உறுப்பெழுத ஒண்ணாமை உரைத்தல்

அறுசீர் ஆசிரியவிருத்தம்

ஏமநெடுஞ் சிலைவளைத்த பெருமானார் அருணகிரி

இறைவர் நாட்டில்,

தாமரைமண் டபத்துறையும் மடந்தையிடை எழுதவென்றால் தலைவ னாரே,

மாமுயற்கொம் பினிலேறி விசும்பலரைப் பறித்துமுனம் வடிவி லாதோன்

ஆமைமயிர்க் கயிறுகொடு தொடுத்தணிந்த புதுமையினும்

அருமை யாமே.

(பொ-ரை) தலைவரே, பொன்மலையை நெடிய வில்லாக வளைத்த பெருமானும், அண்ணாமலையாரும் ஆகிய இறைவரது நாட்டிலே,தாமரைமலர்க் கோயிலில் வாழும் திருமகள் போன்ற தலைமகளின் இடையை ஓவியமாக எழுதவேண்டும் என்றால், பெரிய முயற்கொம்பில் ஏறி, விண்ணகத்து மலரைப் பறித்து முன்னே தன் வடிவம் ஒழிந்துபோன மன்மதன், ஆமை மயிரால் திரிக்கப்பெற்ற கயிறுகொண்டு மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்ட புதுமையைப் பார்க்கிலும் அரிதான புதுமையாகும்.

(வி-ரை) முயற்கொம்பு, விண்மலர், ஆமைமயிர்க் கயிறு இவை ல்லாதவை. இவ் வில்லாதவற்றைக் கொண்டு உருவம் இல்லாதவன் மாலை தொடுத்து அணிதல் அவற்றினும் இல்லாதது. இவை ஒரு கால் நிகழினும் நீவிர் தலைவி இடையை எழுதுதல் அரிது எனக் கூறித் தலைவியின் உறுப்புகளை எழுத ஒண்ணாமை உரைத்தாள். இடையைச் சுட்டியது இல்லாத இடையை எழுதுவது எப்படி என்னும் கருத்தாலாம். ஏமம் பொன்; விசும்புவான்.

-

(99)