உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பு

காக்குமருட் சித்திக் கணபதியை வெள்ளிமன்றில் தூக்கினிறை யோர்பொருளாச் சொல்வர்காண் அம்மானை; தூக்கினிறை யோர்பொருளாச் சொல்வரே யாமாகில்

மாக்கணிறை யன்றி மதிப்பரோ அம்மானை;

.

மதிக்குஞ் சரக்கன்று மாவுயர்ச்சி யம்மானை.

(பொழிப்புரை) உலகினைக் காக்கும் அருள்வடிவினராகிய மூத்தபிள்ளையாரை வெற்றியம்பலத்தில் நடிக்கும் இனிய இறைவனுக்கு ஒப்பான பொருளாகச் சொல்வர் காண் அம்மானை; நடிக்கும் இனிய இறைவனுக்கு ஒப்பான பொருளாகச் சொல்வரே ஆனால் அவர்களை நிறையிட்டுக் கண்டாலன்றி மக்கள் மதிப்புக் கொள்வரோ அம்மானை; அவ்வாறு மதிக்கக்கூடிய பொருளன்று, மிக உயர்ந்த பொருளாம் அம்மானை.

-

(விளக்கவுரை) வெள்ளிமன்று வெள்ளியம்பலம்; தூக்கினிறை - தூக்கு இன் இறை - நடனமிடும் இனிய இறைவர்; தூக்கின் நிறை - தூக்கிக்கண்ட அளவு; ஓர்பொருள்-ஒப்பற்ற பொருள்; ஒருபொருள் மதிப்பர் மதிப்புக் கொள்வர்; மதிப்பிடுவர்; மதிக்குஞ் சரக்கன்று மதிக்கக்கூடிய பொருள் அன்று; மதிக் குஞ்சரக் கன்று ஞானப் பொருளாம் யானைக் கன்றாகிய மூத்தபிள்ளையார். மாவுயர்ச்சி - மிகுந்த உயர்ச்சி; யானையுள் உயர்ந்த யானை ( மா - பெரிய; யானை). மாக்கணிறை யன்றி மதிப்பரோ - மாக்கள் நிறையன்றி மதிப்பரோ ; மாக்கள் இறையன்றி மதிப்பரோ.

-

தடித்த எழுத்தில் உள்ளவை எல்லாம் இரட்டுறல் (சிலேடை) இவ்வாறே மேல் வருவனவும் கொள்க.

1. இந்திரன் பழி தீர்த்தது

(துருவாச முனிவரின் வசைக்கு ஆட்பட்ட இந்திரனின்

பழியை இறைவன் நீக்கியது)

தேனார் கடம்பவனத் தேசுதிகழ் சொக்கலிங்கம்

வானோர் இறைபழியை மாற்றியதே அம்மானை;