உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் -38

வானோர் இறைபழியை மாற்றியதே ஆமாகில் கானாறும் தார்வேளைக் காயாதே அம்மானை;

காயாதோ பூச்சொரியக் கண்டதரு அம்மானை.

(பொ-ரை) தேன் நிரம்பிய கடம்பவனத்தில் ஒளிவிளங்கக் கோயில் கொண்ட சொக்கலிங்கம் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பழியை விலக்கியது அம்மானை; தேவர்களின் தலைவனாகிய இந்திரன் பழியை விலக்கியதே ஆயினால், நறுமணம் கமழும் மாலையணிந்த காமவேளாம் மன்மதனைக் காயாதே (சினந்து எரியாதே) அம்மானை; பூச்சொரியக் கண்ட மரம் காயாமல் இருக்குமோ அம்மானை;

-

(வி-ரை) தேசு ஒளி; கான் மணம் ; தார் மாலை.இப் பாடலில், காய்தல், பூச்சொரிதல், தரு என்பன இரட்டுறல் (சிலேடை) காய்தல் - காய் காய்த்தல், சினங்கொண்டு எரித்தல். பூச்சொரிதல் பூவுதிர்த்தல், பூவம்புகளை ஏவுதல்; தரு மரம், வேண்டிய வேண்டியவாறு தரும் இறைவன்;

-

மலரிட்டு வணங்கிய இந்திரனின் கொலைப்பாவம் போக்கிய சொக்கலிங்கம், மலரம்பு தொடுத்த மன்மதனை எரித்தது ஏன் என்பதை நயமாகக் கூறினார். 'பூத்தமரம் காய்க்கும்'. இது நியதி; இதுபோல் பூச்சொரியக் கண்டமையால் காய்ந்தார் என்றார். 2. வெள்ளையானையின் சாபம் தீர்ந்தது

(துருவாச முனிவரின் வசைக்கு ஆளாகி நூறாண்டு காட்டு யானையாக இருந்த வெள்ளையானையின் சாபத்தை நீக்கியது)

பெரும்பணிபூண் டென்பணிமேற் பெற்றசொக்கர் அன்பர்குழாம்

அரும்பணிசெய் விந்தைகடம் பாடவியில் அம்மானை;

அரும்பணிசெய் விந்தைகடம் பாடவியில் ஆமாகில்

இரும்பணிக்கங் குண்டோநல் வெள்ளிதங்கம் அம்மானை;

வெள்ளிமா தங்கமுற்று மேலான தம்மானை.

(பொ-ரை) பெரிய பாம்பினை அணிகலமாகக் கொண்டு, அதன்மேலும் எலும்பு மாலையும் அணிந்துகொண்ட சொக்க நாதரின் அடியார் கூட்டம் கடம்பவனமாம் மதுரையில் வியப்பான அரிய பணி செய்யும் அம்மானை; கடம்பவனத்தில் வியப்பான அரிய பணி செய்யுமேயானால் சிறந்த பணி செய்வதற்கு வேண்டிய நல்ல வெள்ளி தங்கம் உண்டோ அம்மானை; வெள்ளி மாதங்கமாம் வெள்ளையானை கடம்பவனம் அடைந்து, இழந்துபோன தன் மேலான நிலையை மீண்டும் அடைந்தது அம்மானை.