உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

179

(வி-ரை) பணி - அணிகலம்,பாம்பு, தொண்டு;என்பு யானை; வெள்ளிமாதங்கம்

எலும்பு; மாதங்கம்

வெள்ளையானை; மேலானது மேனிலை

-

யடைந்தது. இரும்பணி - சிறந்த அணிகலம் செய்யும் பணிக்கு; வெள்ளியும் தங்கமும் உண்டோ என்றதற்கு 'வெள்ளி மாதங்கம்' உண்டு என்கிறார். இனி, 'வெள்ளி மாது (வெள்ளிப் பனிமலை மகளாகிய உமை) உற்று அங்கம் மேலானது" என்னும் பொருளும் இறைவற்குக் கொள்க.

3. திருநகரங் கண்டது

(மணவூரில் இருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் குலசேகரன் இறைவன் கட்டளைப்படி கடம்பவனத்தை அழித்து மதுரைத் திருநகரங் கண்டது)

தொண்டர்பணி சொக்கேசர் சொல்லரிய மாதவர்சூழ்

வண்டமர்க டம்பவன வாசிகாண் அம்மானை;

வண்டமர்க டம்பவன வாசியே ஆமாகில்

கண்டறியா ரோமடவார் காமநலம் அம்மானை;

காமதுரை யென்றூர்முன் கண்டவர்காண் அம்மானை.

(பொ-ரை) அடியார்களால் பணிந்து வணங்கப்பெறும் சொக்கநாதர், சொல்லுதற்கு அரிய பெருந்தவத்தோர் சூழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமாகிய கடம்பவனத்தே வாழ்பவராம் அம்மானை; வண்டுகள் மொய்க்கும் கடம்பவனத்தே வாழ்பவரே ஆயினால், மகளிர்தம் காமநல இன்பத்தை அவர் கண்டறி யாரோ அம்மானை; அவர் முன்னம் சோலைகள் நிரம்பிய (கா) மதுரை என்னும் பெயரால் ஓர் ஊர் கண்டவர்காண் அம்மானை.

-

(வி (சோலைகள்)

ரை) காமதுரை: கா + மதுரை

நிரம்பிய மதுரை.

காம + துரை -காமம் நுகர்தலில் பெரியவர்

காக்கள்

வனவாசி - காட்டில் வாழ்பவர், காட்டாள் என்னும் வழக்கு மொழியும், கடம்பவனவாசி என்பதால் மதுரைப் பெருமான் என்பதையும் குறித்தார்.

வண்டு

-

ஈ; வளையல்; ஆகுபெயரால் வளையல் அணிந்த மகளிரைக் குறிக்கும். வண்டமர் கடம்ப வனம் மகளிர் நிரம்பிய மதுரை.