உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம்

(பாண்டியன் மலயத்துவசனுக்கும் காஞ்சனமாலைக்கும் திருமகளாக மீனாட்சியம்மை 'தடாதகைப் பிராட்டி' என்னும் பெயருடன் பிறந்தது)

திகழுமது ரைக்கரசு தென்னன்மல யத்துவசன் மகளெனவே அங்கயற்கண் வந்துதித்தாள் அம்மானை; மகளெனவே அங்கயற்கண் வந்துதித்தாள் ஆமாகில் பகையுடை வேந்தர்க்குப் பயமுண்டோ அம்மானை; பயந்தரித்தப் பாலிருப்பார் பத்தாவே அம்மானை.

(பொ-ரை) விளங்கும் மதுரைக்கு அரசனாகிய பாண்டியன் மலயத்துவசனின் திருமகளாகத் தடாதகைப் பிராட்டி என்னும் பெயருடன் அங்கயற்கண்ணம்மை பிறந்தாள் அம்மானை; திருமகளெனவே பிறந்தாளாயின் பாண்டியர்க்குப் பகையாகிய வேந்தர்களுக்குப் பயமுண்டோ அம்மானை; பயத்தைத் தரித்து அப்பால் இருப்பார் அவள் கணவரே அம்மானை;

அங்கயற்கண்ணம்மை

(வி-ரை) பயமுண்டோ என்னும் வினாவுக்கு, ஆம், அவள் கணவரே பயம் தரித்து அப்பால் இருப்பார்; ஆதலால் அஞ்சாள் என்னும் மறுமொழி யுரைத்தார்! இரட்டுற மொழிதலால் உண்மையையும் உரைத்தார்: 'பயம் (கங்கைநீர்) தரித்து அ பால் (அழகிய இடப்பால்) இருப்பார் பத்தாவே, 'இனிப் பகை வேந்தர்க்குப் பயப்படுவாளோ அம்மை எனின், "கங்கையைத் தரித்தவர் கணவராதலால் கங்கையைத் துணையாக வுடைய மங்கைக்குப் பயமேது?" என்பதுமாம். பயம் - அச்சம்,நீர்.

அப்பால் - அவ்விடம் (அயலிடம்) அ + பால் -அழகிய இடப்பாகம்.

5. திருமணம்

(இறைவன் பாண்டியனாக வந்து தடாதகையைத் திருமணம்

புரிந்தது.)

திக்கெலாம் வென்றுதனச் சீர்பெறவெள் ளிக்கிரிசென்

றிக்கயற்கண் மாதிறை கொண் டிங்குவந்தாள் அம்மானை; இக்கயற்கண் மாதிறை கொண் டிங்குவந்தாள் ஆமாகில் மைக்குழற்கு வந்தான் மதிகுலனோ அம்மானை; மதிமேற் குலவான்கோ மான்மதுரைக்(கு) அம்மானை.