உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

திருவிளையாடல் அம்மானை

181

(பொ-ரை) எல்லாத் திசைகளையும் வெற்றி கொண்டு செல்வச் சிறப்புப் பெற வெள்ளி மலைக்குச் சென்று, இந்தக் கயற்கண் அம்மை பெருஞ்செல்வங் கொண்டு இங்கு வந்தாள் அம்மானை; கயற்கண் அம்மை பெருஞ்செல்வங் கொண்டு இங்கு வந்தாளாயினால், மேகம் போன்ற தன் கூந்தலுக்கு உரிமையாளனாக வந்தவன் மதிகுலமாகிய பாண்டியர் குலமோ அம்மானை; மதிக்கும் மேற்குலவானாகிய அவன் மதுரைக்குக் கோமானும்" ஆவான் அம்மானை.

(வி

-

ரை) தனச்சீர்பெற

-

செல்வச் சிறப்புப் பெற; தனமாகிய (மார்புகளாகிய) சிறப்பைப் பெற, தன் மணவாளனைக் காணுங்கால் தனக்குள்ள மூன்று மார்பகங்களில் ஒன்று மறையும் என்னும் சிறப்பைப்பெற; இறைவனைத் திக்குவிசயத்தில் கண்டதும் ஒரு மார்புகுறையப் பெற்றாள் என்பதைக் குறிப்பது.

-

மாதிறை மாதிறை (மிகுந்த கப்பப்பணம்) கயற்கண் மாது இறை. (இறை வரி, கப்பம்)

-

குழற்கு வந்தான், குழற்கு உவந்தான்; மதி குலன் பாண்டியர் குலம்; மதிக்கத்தக்க உயர்குலம்.

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது

(பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் வேண்டுகோள் படி தில்லையில் ஆடிய திருக்கூத்தை இறைவன் மதுரை வெள்ளி மன்றில் ஆடியது)

சிதம்பரம்போல் வெள்ளிமன்றில் தென்மதுரைச் சுந்தரனைப் பதஞ்சலிவேங் கைப்பாதர் பார்த்துநின்றார் அம்மானை; பதஞ்சலிவேங் கைப்பாதர் பார்த்துநின்றார் ஆமாகில்

கதம்பவனத் தண்ணல் செயும் காரணமே தம்மானை காரணத்தைக் கேட்கில் கனக்கூத்தே அம்மானை.

(பொ-ரை) அழகிய மதுரைச் சொக்கரைப் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் திருச்சிற்றம்பலத்தில் போல மதுரை வெள்ளி மன்றிலும் திருக்கூத்தாடப் பார்த்து நின்றார் அம்மானை; பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் பார்த்து நின்றார்களானால், அக்கூத்தைக் கடம்பவனமாம் மதுரையில் இறைவர் செய்த காரணம் என்ன அம்மானை; காரணத்தைக் கேட்டால் கூத்தின் பெருமையேயாம் அம்மானை.

(வி - ரை) வேங்கைப் பாதர் புலிக்கால் முனிவர்; பாதர்- பாதத்தை உடையவர். பொன்னம்பலக் கூத்துக் கண்டபின்னரே