உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் -38

உண்ணும் வழக்கம் கொண்ட அவர்கள், தன் திருமணத்தில் உண்ணுதற்காக இறைவன் மதுரை வெள்ளிமன்றில் திருக்

கூத்தாடினான் என்க. கதம்பவனம்

நோக்கி 'ட'கரம் 'த' கரம் ஆகியது.

கனக்கூத்து - சிறந்த கூத்து:

கடம்பவனம். எதுகை

கனமும் கூத்தும்; கனம்; இசை வகையுள் ஒன்று.

'கனம் கிருஷ்ணையர்' என்பார் பெயரிலுள்ள கனம் சைவகைச் சிறப்புப் பெயராம்.

7. குண்டோதரனுக்கு அன்னமிட்டது

(தடாதகைப் பிராட்டியார்

திருமணத்தின்போது

மிகுதியாகக் கிடந்த சோற்றை உண்பதற்குக் குண்டோதரனை இறைவன் ஏவி உண்பித்தது) (குண்டம் -குழி, பெரும்பானை; உதரம் - வயிறு)

தென்மதுரை யார்மணத்தில் தேவி அமுதுதரத் தன்னிகரில் குண்டோ தரனுண்டான் அம்மானை; தன்னிகரில் குண்டோ தரனுண்டான் ஆமாகில் அன்னமலை என்னமிகுந் தாக்குமோ அம்மானை; ஆக்கவல்லார் ஆக்குமலை அன்னமவள் அம்மானை.

(பொ ரை) அழகிய மதுரைச் சோமசுந்தரர் தம் திருமணத்தில் தேவி அமுது படைக்க, உண்ணுதலில் தனக்கு ஒப்பாரில்லாக் குண்டோதரன் உண்டான் அம்மானை; ஒப்பில்லாக் குண்டோதரன் உண்டானே ஆயினால் அவனுக்குத் தக்கவாறு சோற்றை மலைபோல மிகுதியாக ஆக்கினரோ அம்மானை; ஆம்; அவ்வாறு ஆக்க வல்லாரை ஆக்கும் மலையன்னம் (பார்வதி) அவள் அம்மானை.

(வி-ரை) அன்னமலை - சோற்றுமலை; அத்தொடரையே முன் பின் மாற்றி 'மலையன்னம்' என்றார் உமையம்மையைக் குறித்தற்கு அவள் மலையரசன் மகளாகலின். அன்னம் - அன்னம் போன்றவள், சோறு.

ஆக்கவல்லார் ஆக்குமலை அன்னம்: எல்லாவற்றையும் ஆக்க வல்லவரையும் ஆக்கும் மலையன்னம் ஆதலின், அவள் ஆக்குதல் குறைந்த அளவாமோ எனக் காண்க; இறைவி வேண்டுதற்படி இறைவர் அன்னக்குழி முதலியவற்றை