உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

183

வருவித்தலால் அவர் சோறு ஆக்குவாரும், அவரை அவ்வாறு ஆக்குவார் அம்மையுமாகப் பொருளும் கொள்க.

8. அன்னக் குழியையும் வையையையும் அழைத்தது (குண்டோதரனுக்காகச் சோற்றுக்குழியையும், வையை ஆற்றையும் வருவித்து உண்ணச் செய்தது.)

அன்னக் குழாமதுரை யாதிபர்குண் டோதரற்கா அன்னக் குழிவையை யாறழைத்தார் அம்மானை; அன்னக் குழிவையை யாறழைத்தார் ஆமாகில்

அன்னவர் நஞ்(சு) உண்ட(து) அறக் கொடிதே அம்மானை; அறக்கொடியார் வாழ்வார்க்(கு) அமுதுவிடம் அம்மானை.

-

(பொ ரை) சோற்றுக்காக வருந்துதல் இல்லாத மதுரைக்கு இறைவர், குண்டோதரனுக்காக அன்னக் குழியையும், வையை யாற்றையும் வருவித்தார் அம்மானை; அன்னக்குழியையும் வையையாற்றையும் வருவித்தார் ஆயினால், அத்தகைய இறைவர் நஞ்சினை உண்டது மிகக் கொடுமையானதாம் அம்மானை; அறக்கொடியாகிய உமையம்மையார் ஒரு பாகமாக வாழ்பவர்க்கு உணவு, 'விடமாம்' அம்மானை. 'விடமாம்'அம்மானை.

-

(வி-ரை) சோற்றுக்கு + உழா; உழா -உழத்தல் இல்லாத, வருந்துதல் இல்லாத; தாம் உண்ணுதற்கென்று உழுதொழில் புரிதல் இல்லாத, பிறருக்கு உதவுதற்காகவே உழுதொழில் செய்யும்; அறக் கொடிது மிகக் கொடிது; அறக் கொடியார் அறக்கொடி போன்றவராகிய உமையம்மையார். "மிகக் கொடிய வராக வாழ்பவர்க்கு அமுதமே கிடைப்பினும் அது விடமேயாம் என்றும்,"நனிநாகரிகர்க்கு நஞ்சும் அமுதேயாம்" என்றும் கூறுமுண்மையும் குறிப்பால் கொள்க.

கொடியார் - கொடியவர்; கொடி போன்றவர். அன்னக்குழி அழைத்தவர். அன்னக்கு உழா மதுரையார் அவர் நஞ்சுண்டார் என்ற நயம் அறிக.

9. ஏழுகடல் அழைத்தது

(தடாதகையின் அன்னை காஞ்சன மாலை கடலாடும் விருப்புடையவராக, அவர் ஆடுதற்காக ஏழு கடல்களை மதுரைக்கு இறைவர் அழைத்தது)