உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 38ஓ

39. மாமனாக வந்து வழக்குரைத்தது

(தனபதி என்பான் தன் தங்கை மகனுக்குத் தன் சொத்தை யெல்லாம் வைத்து வீட்டை விட்டுச் சென்றான். அவன் உறவினர் அச்சொத்தைக் கவர்ந்து கொண்டனர். இறைவன் தனபதி வடிவில் வந்து வழக்காடி உரிய சொத்தை வழங்கினான்.)

சோமனணி வோர்மதுரைச் சொக்கர்வணி கக்குழந்தை மாமனென வந்து வழக்குரைத்தார் அம்மானை; மாமனென வந்து வழக்குரைத்தார் ஆமாகில்

ஆமகவை யேன்கறிகொண் டாரறிவோ டம்மானை; அறிவுமயக் கந்தனைப்பெற் றார்செய்யார் அம்மானை.

(பொ ரை) திங்களைச் சூடுவோராகிய மதுரைச் சொக்கர் வணிகக் குழந்தைக்கு மாமனாக வந்து வழக்காடினார் அம்மானை; மாமனாக வந்து வழக்காடினார் என்றால் அந்தோ, சிறுத்தொண்டர் செல்வன் சீராளனை ஏன் கறியாக்கியுண்டார் நல்லறிவோடு அம்மானை; அறிவுமயமாம் திருமுருகனைப் பெற்ற சிவனார் அவ்வாறு செய்யார் அம்மானை.

(வி-ரை) சோமன் - திங்கள்: வணிகன் - தளபதி; அவனுக்கு மகப்பேறு இன்மையால் தங்கை மகனுக்குச் சொத்தைத் தந்தான். 'ஆ' - அந்தோ! அறிவோடு மகக்கறி உண்பாரோ என்றார்க்கு அறிவுமயமான கந்தனைப் பெற்ற தந்தை மற்றொரு மகவை அறிவோடு தின்பாரா எனப்பதில் மொழிந்தார். அவனைச் சீராளா என்று அழைப்பித்து வரச்செய்தார் ஆகலின் கொன்றாரும் தின்றாரும் அல்லர் என்றார் என்க. இனி, உலகியன் முறைப்படி, "அறிவு மயக்கந்தனைப் பெற்று ஆர் செய்யார்" அறிவு மயக்கத்தைப் பெற்ற எவரே இவ்வாறு செய்யார்? செய்வர்!" என்று மொழிந்த நயம் உணர்க.

40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டியது

(வரகுண பாண்டியன் சிறந்த சிவனடியான். அவனுக்குச் சிவலோகம் சென்று சிவபெருமான் திருவோலக்கம் காண வேண்டுமென்ற பேராவல் உண்டாயிற்று. இறைவன் நந்தி தேவனைக் கொண்டு வரகுணனுக்குச் சிவலோகத்தைக் காட்டச் செய்தார்.)

அரியமரர் சூழ்மதுரை அங்கே வரகுணனுக்(கு)

அரியசிவ லோகங்காட் டண்ணல்சொக்கன் அம்மானை;