உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

அரியசிவ லோகங்காட் டண்ணல்சொக்கன் ஆமாகில் அரியயன்மே லானபொரு ளாகுமே அம்மானை; ஆகுமேல் அப்பொருட்கும் அப்பன்காண் அம்மானை.

209

(பொ-ரை) திருமாலும் தேவரும் வழிபடுதற்குச் சூழ்ந்து வரும் மதுரையில் வரகுண பாண்டியனுக்குக் காணுதற்கு அரிய சிவலோகம் காண்பித்தான் சொக்கநாதன் அம்மானை; அரிய சிவலோகம் காண்பித்தவன் சொக்கநாதனாயினால் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அவன் மேலான பொருளாவனே அம்மானை; ஆகும்; அன்றியும் அப் பொருளுக்கும் அப்பனாவான் அவனே காண் அம்மானை.

(வி - ரை) அரி அமரர் திருமாலும் தேவரும்; அரி அயன் மேலான - அரிக்கும் அயனுக்கும் (நான்முகனுக்கும்) மேலான. அரன், அரி, அயன் என்னும் மூவர்க்கும் முதல்வனாவான் அவனே என்பாராய் 'அப்பொருட்கும் அப்பன்' என்றார். இனி, ஆகு மேல் அப்பொருட்கும் - பெருச்சாளியின் மேல் அமரும் மூத்த பிள்ளையார்க்கும் அப்பன் காண் என இரட்டுறல் பொருள் 'ஆகுகன்' 'ஆகுவாகனன் என்பன பிள்ளையார்

காண்க. பெயர்கள்.

9

41. விறகு விற்றது

(ஏமநாதன் என்பான் இசை சை வல்லான்; அவனோடு பாணபத்திரன் என்பான் இசைப்போர் புரிய நேர்ந்தது. இறைவன் பாணபத்திரன்மேல் கொண்ட அன்பால் விறகுத் தலையனாகி வந்து இசைபாடினான்; தான் பாணபத்திரனால் தகுதியற்றவன் என விலக்கப்பெற்ற மாணவன் என்றான்.

அதனைக் கேட்டஞ்சிய ஏமநாதன் இரவோடே ஊரை விட்டோடினான்.)

திசையோர் பணிந்தேத்தும் தென்மதுரைச் சொக்கலிங்கர் விசையாய் நடந்து விறகுவிற்றார் அம்மானை; விசையாய் நடந்து விறகுவிற்றார் ஆமாகில்

இசையார் விறகுவிலைக் கேலுமோ அம்மானை;

ஏலு மதனை எரிக்கவென்றால் அம்மானை.

(பொ

-

ரை) எத்திசையினரும் வணங்கி வாழ்த்தும் அழகிய மதுரைச் சொக்கலிங்கர் விரைவாக நடந்து விறகு விற்றார் அம்மானை; விரைவாக நடந்து விறகு விற்றார் என்றால், இசையில் வல்லவர் விறகு விலை கூறுதற்குத் தகுமோ அம்மானை; தகும்; அதனை எரிப்பதற்கு ஆகும் என்றால் அம்மானை.