உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

43. பலகை யிட்டது

211

அடை மழையின் போது பாணபத்திரன் ஈரத்தில் நின்று பள்ளியறையில் பாடினான்; இறைவன் பொற்பலகை வழங்கி, அதன்மேல் நின்று பாட ஏவினான்.)

சொக்கன் மதுரேசன் சொல்லிசைவாய்ப் பாணரைமுன்

வைக்கும் பலகைமிசை வண்மையாய் அம்மானை; வைக்கும் வலகைமிசை வண்மையாய் ஆமாகில் தைக்கும்பூப் பாணனையேன் றான்வையான் அம்மானை; தான்வைத்தான் பின்புசித்தன் தையலைக்கண் டம்மானை.

(பொ-ரை) மதுரைக்கு இறைவனாம் சொக்கன், இசைத் தேர்ச்சி மிக்க பாணபத்திரனைக் கொடை வளத்தால் பொற் பலகை மேல் வைத்தான் அம்மானை; பொற்பலகை மேல் வைத்தான் என்றால், அத்தகைய கொடை வண்மையாளனாம் இறைவன் தைக்கும் பூப்பாணனாம் மன்மதனை ஏன் உருவத் தோடும் வைத்திலன் அம்மானை; பின்னே மன்மதன் தையலாம் இரதி வேண்டிக் கொண்டதை ஏற்றுத்தான், அவளுக்காக உருவத்தோடு வைத்தான் அம்மானை.

(வி

-

-

-

அவனை

ரை) சொல் இசை புகழ் வாய்ந்த இசை; பாணன் பாணபத்திரன்; மிசை - மேல்; தைக்கும் தையல் செய்யும், அம்பு ஏவும்; பூப்பாணன் - பூ வேலைப்பாடு செய்யும் பாணன் ; பூவாகிய பாணத்தை ஏவும் மன்மதன்;

"பலகையில் வைத்தான் ஒரு பாணனை; ஒரு பாணனை உயிரோடும் வையான் ஏன்" என முரண் இன்பம் காண்க. வைத்தான் -உயிரோடும் விட்டுவைத்தான்; சித்தன் - மன்மதன்; அவன் தையல் இரதி; இரதி வேண்டிக் கொண்டவாறு வைத்தான் என்க. 'தையல்' என்பது பாணனுக்கு ஏற்ற தகுதிச் சொல்லாகலின் அதனை வைத்தார்.

44. இசைவாது வென்றது

(பாணபத்திரன் மனைவி சைவல்லாள்; அவளொடு சை வாது செய்ய ஈழத்தில் இருந்து ஒருத்தி வந்தாள்; உண்மைக்கு மாறாக ஈழத்தாள் இசையே சிறந்ததெனப் பாண்டியன் கூறினான்; இறைவன் கட்டளைப்படி இசைவாது திருக்கோயிலில் நிகழ்ந்தது. அங்கு அரசன் உண்மையை மறைக்க முடியாமல் பாணபத்திரன் மனைவியின் வெற்றியை ஏற்றுக் கொண்டான்.)