உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம் -38 ஓ

ஆற்றமது ரேசரிசை யாழ்ப்பாணர் தேவிக்காச் சாற்றுமிசை வாதெளிதாத் தாம்வென்றார் அம்மானை; சாற்றுமிசை வாதெளிதாத் தாம்வென்றார் ஆமாகில் மாற்றரிதோ வன்பர் மறவாதம் அம்மானை;

மறவாத வன்பருடன் வாதவற்கே தம்மானை.

(பொ-ரை) செயற்கரிய செய்யும் மதுரைச் சொக்கர் இசை வல்ல பாணபத்திரன் மனைவிக்காகப் புகழ் வாய்ந்த இசைவாது அமைத்து எளிமையாகத் தாம் வெற்றி கொளச் செய்தார் அம்மானை; எளிதாக இசைவாதில் வெற்றி கொளச் செய்தார் என்றால், வன்தொண்டராம் சுந்தரரின் வலிய வாதத்தை மாற்றுவது அவர்க்கு அரிதோ அம்மானை; என்றும் தம்மை மறவாத அன்பராம் அவருடன் தமக்கு வாது ஏது அம்மானை.

>

(வி-ரை) மாற்றரிதோ வன்பர் -மாற்ற அரிதோ வன்பர்; மாற்ற அரிதோ அன்பர்; மறவாத வன்பர் -மற வாத வன்பர்; மறவாத அன்பர்; 'வாது அவற்கு ஏது ல்லை; அவ்வாது தம்மை என்றும் அவர் மறவாதிருக்கத் தாமே தொடுத்தவாதன்றி அவர் வாதன்று என்பதாம். சுந்தரருடன் இறைவர் செய்த வாதினைப் பெரிய புராணம் "தடுத்தாட் கொண்ட புராண”த்துக்

காண்க.

45. பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்தது

(பெற்றோரை இழந்து போன பன்றிக்குட்டிகள் பன்னிரண்டு; அவை, கொண்ட துயரை ஆற்ற இறைவனே தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டினான். வியாழன் சாபத்திற்கு ஆளாகியிருந்த அக்குட்டிகள் இறைவன் அருளால் கடைத்தேற்ற முற்றன.)

நின்றெனையா ளுங்கயற்கண் நேயர்சொக்கர் தாயெனப்போய்ப் பன்றிமக்கள் உண்ணமுலைப் பால்கொடுத்தார் அம்மானை;

பன்றிமக்கள் உண்ணமுலைப் பால்கொடுத்தார் ஆமாகில் மன்றமுலைப் பாலாண்பால் வந்ததென்னோ அம்மானை; வாராதோ பச்சை மதலைபெற்றார்க் கம்மானை.

(பொ-ரை) நிலைபெற்று என்னை ஆட்கொண்டு வரும் அங்கயற்கண்ணிக்கு அன்பராம் சொக்கர் தாமே தாயாகப் போய்ப் பன்றிக்குட்டிகளுக்குப் பால் பருக மடியைக் கொடுத்தார் அம்மானை; பன்றிக்குட்டிகளுக்குப் பால் பருக மடியைக் கொடுத்தாரானால் மிகுதியாக மடிப்பால் ஆண்பாலாகிய அவரிடமிருந்து வந்தது எதனாலோ அம்மானை; பச்சை