உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

திருவிளையாடல் அம்மானை

213

மதலையாம் குழந்தையைப் பெற்றவருக்குப் பால் சுரக்காதோ அம்மானை.

-

-

(வி ரை) நின்று நிலைபெற்று; நேயர் - அன்பர்; குட்டியை மக்கள் என்றார், வியாழ முனிவன் சாபத்தால் வேளாண் மக்கள் பன்னிருவர் பன்றியாம் சாபம் பெற்றமையால்; மன்ற மிகுதியாக; 'முலைப்பால், ஆண்பால் வந்தது என்னோ" என்றதில் பால்நயம் அமைந்துள்ளது. தாயாக மாறி எப்பொழுது வந்தாரோ அப்பொழுதே மடியில் பால் சுரக்கத்தானே செய்யும் என்றார். பச்சை மதலை பெற்றார் பச்சை மது அலை

பெற்றார் - புதிய மது அலை பெற்ற மதிசூடியவர்; புதிய மதுவை (அமுதை) அலையில் பெற்ற அவர்; அவர்க்குப் பால் தருதல் அரிதோ என்க.

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கியது

(சாபம் நீங்கப் பெற்ற பன்றிக்குட்டிகளாகிய மக்களைப் பாண்டியன் அமைச்சர்களாக்கி வைத்து, அப்பாண்டியனுக்கு முன்னே அமைச்சர்களாக இருந்தவர் மகளிரை மணமுடித்து வைத்தது.)

துன்னியசீர்த் தென்மதுரைச் சொக்கேசர் பன்றிகளைத்

தென்னவற்கு மந்திரியாய்ச் செய்தனர்காண் அம்மானை;

தென்னவற்கு மந்திரியாய்ச் செய்தனரே யாமாகில்

பன்னுமவர்க் கேதுபட்சம் பன்றிமேல் அம்மானை;

பன்றியறி யாதவர்க்குப் பட்சமன்றோ அம்மானை.

(பொ-ரை) நிறைபுகழ் வாய்ந்த அழகிய மதுரைச் சொக்க நாதர் பன்றிகளைப் பாண்டியனுக்கு அமைச்சராகச் செய்தார் அம்மானை; பாண்டியனுக்கு அமைச்சராகச் செய்தார் என்றால், சொல்லப்பட்ட அச்சொக்கர்க்குப் பன்றிமேல் வந்த அன்பின் காரணம் என்ன அம்மானை; பன்றியுருக் கொண்ட திருமாலால் அறியப் பெறாதவர்க்கு அவ்விரக்கத்தால் அன்பு உண்டாகு மன்றோ அம்மானை.

(வி-ரை) துன்னியசீர் - நிறைந்த பெருமை; பன்னும் கூறப்பெறும்; பட்சம் - அன்பு ; பன்றியால் அறியப் பெறாதவர் ஆகலின் தாமே தேடிவந்து பரிவு கூர்ந்தார் என்று நயமாகச் சுட்டினார்.