உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

216

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

பண்டோர்சொக் கேசர் பணியாற்பல் கோடியண்டம் கண்டோர் மதுரையெல்லை காட்டினார் அம்மானை; கண்டோர் மதுரையெல்லை காட்டினார் ஆமாகில் கொண்டால வாயெனப்பேர் கூடுவதே அம்மானை; கூடாதா கூடலெனக் கூறுநகர்க் கம்மானை.

(பொ-ரை) பலகோடி உலகங்களையும் படைத்தவராகிய ஒப்பற்ற சொக்கநாதர் பழநாளில் ஒரு பாம்பினால் மதுரையின் எல்லையைக் காட்டினார் அம்மானை; மதுரையின் எல்லையைக் காட்டினார் என்றால், அதனைக் கொண்டு அந்நகர்க்கு ஆலவாய் என்று பெயர் இடுதல் பொருந்துவதாம் அம்மானை; கூடலெனப் பெயர் கூறப்படும் நகர்க்கு இது கூடுவதேயாம் அம்மானை.

(வி - ரை) பணியால்-செயலால், பாம்பால் ; அண்டம் - உருண்டை, உலகம்; கொண்டு - அக் காரணம் அக் காரணம் கொண்டு; ஆலவாய் எனப் பெயர் கூடுவதே என்றார்க்கு, 'கூடல்' ஆதலின் அதன் பெயர் பலவாகக் கூடுவது இயல்பேயாம் என்றார். கூடல் மதுரை; கூடுதல்; கூடாதா -கூறக் கூடாதோ, எண்ணிக்கை கூடாதோ.

50. சுந்தரப்பேர் அம்பெய்தது

(வங்கிய சேகர பாண்டியனுக்கும் விக்கிரம சோழனுக்கும் போர் உண்டாயிற்று. இறைவன் ஒரு வேடுவனாகி ஓர் அம்பால் பல்லாயிவரைக் கொன்றான். அவ்வம்பில் 'சுந்தரம்' என்னும் பெயர் இருக்கக் கண்ட சோழன் தோற்றோடினான்)

மந்திர வேதத்தின் மதுரேசன் பாண்டியர்க்காச் சுந்தரப்பே ரம்பெய்தான் சோழன்மேல் அம்மானை; சுந்தரப்பே ரம்பெய்தான் சோழன்மேல் ஆமாகில் வந்தெதிர்த்த போரின் மலையானோ அம்மானை; மலைவில்லன் என்றொருபேர் வாய்த்தவற் கம்மானை.

(பொ-ரை) மந்திரத்திற்கும் மறைக்கும் தலைவனாம் சொக்கநாதன் பாண்டியனுக்காகச் சுந்தரம் என்னும் பெயர் பொறிக்கப் பெற்ற அம்பைச் சோழன்மேல் எய்தான் அம்மானை; சுந்தரப் பெயர் அம்பைச் சோழன்மேல் எய்தான் எனின், வந்து நேர்ந்த போரில் அவன் மலைக்கமாட்டானோ அம்மானை; அவன் மலைக்கமாட்டான்; ஏனெனின் அவனுக்கு 'மலைவில்லன்' என்றொரு பேருண்டு அம்மானை.