உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வி

-

திருவிளையாடல் அம்மானை

-

217

ரை) மலையானோ மலைக்கமாட்டானோ, போரிடமாட்டானோ; 'மலை வில்லன்' - மலைவு இல்லாதவன்; 'மலை வில்லன்' - மேருமலையாகிய வில்லையுடையவன்.இப் பெயர் வாய்த்த அவன் போரில் மலைப்பனோ? மாட்டான் என்றவாறு.

51. சங்கப்பலகை தந்தது

(சங்கப் புலவர்கள் வேண்டுதலுக்கு ஏற்பப் புலவர்களின் புலமைத் திறத்தை அளந்து அவர்க்கு இடந்தரும் சங்கப் பலகையை இறைவன் தந்தது)

கருணைநிறை கூடற் கயற்கண்மகிழ் சொக்கேசர் ஒருகையிற்சங் கேந்திக் குயர்ந்தவர்காண் அம்மானை; ஒருகையிற்சங் கேந்திக் குயர்ந்தவரே யாமாகில் தருமவர்தங் கையினிற்பல் சங்கமுண்டோ அம்மானை; சங்கப் பலகையறத் தாமளித்தார் அம்மானை.

(பொ-ரை) அருள் நிறைந்த மதுரை அங்கயற்கண்ணி தன்னோடு அமர்ந்து மகிழும் சொக்கநாதர் ஒருகையில் சங்கேந்திய திருமாலுக்கு உயர்ந்தவராம் அம்மானை; ஒரு கையில் சங்கேந்திய திருமாலுக்கு உயர்ந்தவரானால், கொடையாளராகிய அவர்தம் கையில் பல சங்கம் உண்டோ அம்மானை; சங்கப்பலகை வேண்டுமளவு அவர் அளித்தவர் அல்லரோ அம்மானை.

-

(வி-ரை) சங்கேந்தி - திருமால்; ஒரு கையிற் சங்கேந்திக்கு உயர்ந்தவர் ஆயினால் கையினில் பல சங்கமுண்டோ என்றார். 'கை, பல சங்கம்' என்றும் சொற்களையே ஏற்றவாறு இயைத்துச் 'சங்கப்பலகை' அருளியவர் என்றார். அற அறுதியிட; புலவர் ஒவ்வொருவருக்கும் வேண்டுமிடம் அளவிட்டுத்தர; தங்கையில் சங்கேந்தி அவன்; புலவர், தங்கையில் சங்கப்பலகை தந்தவன் இவன்; இதனால் உயர்வு அறிக என்றும் அறிவித்தார். வைத்திருப்பவனினும், கொடையாளன் உயர்ந்தோன்' என்பது

குறிப்பு.

52. தருமிக்குப் பொற்கிழி யளித்தது

(சண்பகமாறனுக்கு அரசியின் கூந்தலில் உள்ள மணம் இயற்கையா? செயற்கையா? என ஐயம் உண்டாயிற்று. அவ்வையம் நீங்கக் கவிபாடுவார் பெறுமாறு பொற்கிழி (பொன் முடிப்பு) வைத்தான். தருமி என்பான் அப்பரிசைப் பெறுவதற்கு,