உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

இறைவன் ஒரு பாடல் அருளியதுடன் புலவனாக வந்து வாதிட்டுத் தருமிக்குப் பொற்கிழி தந்தது)

நல்கவெனப் பொற்கிழியை நற்றருமிக் கென்றுகவி சொல்லிவிட்டார் தென்மதுரைச் சுந்தரனார் அம்மானை; சொல்லிவிட்டார் தென்மதுரைச் சுந்தரனார் ஆமாகில் வல்லகவிக் கேன்கீரன் மாசோதும் அம்மானை; மாசோதி யாரடியார் வாயுள்ளார் அம்மானை.

(பொ-ரை) அழகிய மதுரைச் சொக்கர் அடியவனாம் நல்ல தருமிக்குப் பொற்கிழி கொடுக்கவென்று கவி எழுதித் தந்தார் அம்மானை; கவி எழுதித் தந்தார் சொக்கரென்றால், அவர் இயற்றிய வளமிக்க கவிதைக்கு நக்கீரன் ஏன் குற்றம் சொன்னான் அம்மானை; அவ்வாறு சொன்னதால் தான் பேரொளிப் பிழம்பாம் இறைவர் றைவர் அடியாருள் நக்கீரர் சிறந்தாராயுள்ளார் அம்மானை.

(வி-ரை) கடவுள் கவிக்குக் கீரன் மாசோதியது மாசோதியார் அடியாருள் சேர்தற்காம் என்று காரணம் காட்டினார். கிழி - துணி; துணியால் கட்டப் பெற்ற முடிப்பு; மாசோதியார் அடியார் - பேரொளியாளராகிய இறைவர் அடியார்.

மாசோதியார் அடியார் வாயுள்ளார்

வராகிய அவர் அடியார் கூட்டத்தில் உள்ளார்.

-

மாசு ஓதிய

மாசு ஓதி யார் அடியார்வாய் உள்ளார் - எவரே குற்றம் கூறி அடியார் கூட்டத்துள்ளார்? நக்கீரரே என அவர் பெற்ற பேறு உரைக்க.

53. கீரனைக் கரை யேற்றியது

(நெற்றிக்கண் வெம்மை தாங்காத நக்கீரன் பொற்றாமரைக் குளத்துள் வீழ்ந்தான். சங்கப் புலவர்கள் இறைவனிடம் மன்னித்துதவ வேண்டினர். இறைவன் அருட்கண் செலுத்திக் கீரனைக் கரையேற்றினான்.)

சொக்கேசன் சங்கம் துதித்திடப்பொற் றாமரைவீழ் அக்கீர னைக்கரையேற் றன்புவைத்தான் அம்மானை; அக்கீர னைக்கரையேற் றன்புவைத்தான் ஆமாகில் தக்கனுக்காட் டுத்தலையேன் தான்வைத்தான் அம்மானை; தானுமன் றாட்டிற் றலைவைத்தான் அம்மானை.