உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

219

(பொ-ரை) சொக்கநாதன் சங்கப் புலவர்கள் நக்கீரனைக் கரையேற்ற வேண்டித் துதிக்கவும், பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து கிடந்த நக்கீரனைக் கரையேற்றுமாறு அன்பு செலுத்தினான் அம்மானை; கீரனைக் கரையேற்ற அன்பு வைத்தான் என்றால், அவ்விறைவன் தக்கனுக்கு ஆட்டுத்தலை வைத்தது ஏன் அம்மானை; அவனும் மன்றங்களில் ஆடுதலைத் தலைமையாகக் கொண்டவன் ஆதலால் வைத்தான் அம்மானை.

(வி ரை) சங்கம் சங்கப் புலவர்: தக்கன் செய்த வேள்விக்குச் சிவனை அழையாமலும், பழித்தும் இழிவு செய்தமையால் வீரபத்திரரால் தலை கிள்ளப் பெற்றுப் பின்னே ஆட்டுத்தலை வைக்கப்பெற்றான். தக்கயாகப் பரணிச் செய்தி இது. 'கீரனைக் கரையேற்றியவர் தக்கன் தலையைக் கிள்ளியதேன்' என்றார்; இறைவன் ஆட்டுத்தலை வைத்தல் (அம்பலங்களில் ஆடுதலை முதன்மையாகக் கொள்ளுதல்) இயல்பானவன் ஆதலால் செய்தான் என்றார். தானும் மன்று (அம்பலம்) ஆட்டு தலை; மன்றாடுதலைத் தலையாக மதிப்பவனே அன்றிச் செருக்கை மதியான்; நக்கீரன் மன்றாடினான்; கரையேறினான்; தக்கன் செருக்கினான்; 'ஆட்டுத் தலையனானான்' என்ற பொருளும் கொள்ள வைத்தார்.

54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தது

(கரையேற்றப் பெற்ற கீரனுக்கு அகத்தியரைக் கொண்டு இறைவன் இலக்கணம் கற்பித்தது.)

தலத்துறைநக் கீரனுக்குத் தாமுரைத்தி டாதுசொக்கர்

இலக்கணம் போதித்தார் இருந்தவரால் அம்மானை;

இலக்கணம் போதித்தார் இருந்தவரால் ஆமாகில் மலைத்தமிழ்அ றிந்துரைக்க மாட்டாரோ அம்மானை; மாட்டார் அறிவரியார் மற்றறிவார் அம்மானை.

ம்

(பொ-ரை) மதுரை நகரிலே வாழும் புலவன் நக்கீரனுக்குத் தாமே இலக்கணம் உரையாது சிறந்த தவத்தினராம் அகத்தியரைக் கொண்டு உரைத்தார் சொக்கர் அம்மானை ; அகத்தியரைக் கொண்டு இலக்கணம் உரைத்தார் என்றால், மலையிலே பிறந்த தமிழ் இலக்கணத்தைச் சொக்கர் அறிந்து உரைக்க மாட்டாரோ அம்மானை; அன்பால் நெகிழ்ந்துருக மாட்டாரால் அறிதற்கு அரியவராகிய அவர், மற்று எல்லாவற்றையும் முழுதறிய வல்லவராம் அம்மானை.