உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம் -38

(வி - ரை) தலம் - இடம்; மதுரை: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது பெயர்; இருந்தவர் - அரிய தவத்தினர்; தமக்கு இணையாகப் பொதியத்து இருந்தவராகிய அகத்தியர் வடக்குத் தாழத் தெற்கு உயர இறைவன் ஏவலால் பொதியத்திற்கு வந்து நிலம் நிலைப்படுத்தினார் என்னும் கதைக் குறிப்புணர்க. மலைத்தமிழ் - மலையிற் பிறந்த தமிழ். "பொருப்பிலே பிறந்து" என்பார். மலைபோன்ற உயர்ந்த தமிழுமாம்; மாட்டார் - திருமால்; அவரால் அறிவரியார்; அனைத்தும் அறிவார் எனினும் ஆம்.

55. சங்கத்தார் கலகம் தீர்த்தது

(சங்கப் புலவர்கள் தாம் தாம் கண்ட நூலே சிறந்ததென மாறுபட்டனராக, இறைவன் அருளால் 'உருத்திர சன்மன்' என்பானோர் 'ஊமன்' தன் மெய்ப்பாட்டால் கபில, பரண, நக்கீரர்,உயர்வை எடுத்துக்காட்டி மாறுபாடு அகற்றியது.)

ஆசையமு தங்கயற்கண் அன்பர்சொக்கர் வந்துதவ நேசர்வினை தீர்ப்பது நிகழ்த்துமுல கம்மானை; நேசர்வினை தீர்ப்பது நிகழ்த்துமுல காமாகில் பேசுசங்கத் தார்கலகம் பெற்றதேன் அம்மானை; பெற்றவர் தீர்ப்பதுவாய் பேசுவதன் றம்மானை.

·

(பொ ரை) ஆர்வ மிக்க அமுதம் போன்றவராகிய அங்கயற் கண்ணியின் அன்பராம் சொக்கநாதர், நேரில் வந்து தவத்தால் சிறந்த அடியார் தீவினையைத் தீர்ப்பதை உயர்ந்தோர் கூறுவர் அம்மானை; அடியார் தீவினையைத் தீர்ப்பதை உயர்ந்தோர் கூறுவராயின், புகழ் மிக்க சங்கப் புலவர்கள் கலகமிட்டு இருந்ததேன் அம்மானை; பெற்றவர்கள் தம் மக்கள் துயரைத் தீர்ப்பதை வாயால் கூறுவது இல்லை அம்மானை.

(வி - ரை) உலகோர் பேசுவது பிறர்க்கு உதவுவதையே; தம் பிள்ளைகளுக்குச் செய்யும் நலங்களைப் பெற்றோர் பேசுவது இல்லை என்றார். பெற்றோர் பெருந்தன்மை இன்னதெனப் பேசினார். நிகழ்த்தும் - கூறும்; உலகம் - உயர்ந்தோர்; பெற்றவர் தீர்ப்பது கலகம் பெற்ற சங்கத்தவரைத் தீர்ப்பது; வாய் பேசுவது அன்று - வாய்பேசக் கூடியது அன்று; ஊமை; தீர்ப்பது விலக்குவது; தீர்ப்புக் கூறுவது.

-

முருகனே தனபதி என்பான் மகனாக உருத்திர சன்மப் பெயரோடு வந்தான் என்பது கதை.