உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது

221

இடைக்காடன் பெரும் புலவன்; அவன் பாடலைப் பாண்டியன் குலசேகரன் மதித்தானல்லன்; வெறுப்புக் கொண்ட இடைக்காடன் இறைவனை வழிபட்டு வையைக்கு வடக்கே சென்றான்; இறைவனும் அவனைத் தொடர்ந்தான்; பாண்டியன் தன் குற்றம் உணர்ந்து வருந்தினான்; றைவன் காடனுடன் மீண்டான்.)

நின்றசொக்கன் ஆலயத்தின் நீங்கிவட வாலவாய்ச் சென்றிடைக்கா டன்பிணக்குத் தீர்த்துவந்தான் அம்மானை; சென்றிடைக்கா டன்பிணக்குத் தீர்த்துவந்தான் ஆமாகில் தன்றிருத்தாள் வாடத் தருமமோ அம்மானை;

தருமனையந் நாளுதைத்த தாளன்றோ அம்மானை.

டைக்

(பொ ரை) நிலைபெற்ற சொக்கநாதன் தன் திருவாலவாய்க் கோயிலை நீங்கி வட திருவாலவாய்க்குச் சென்று இடைக்காடனுக்கு உண்டாகிய மாறுபாட்டை நீக்கி வந்தான் அம்மானை; சென்று இடைக்காடன் மாறுபாட்டை நீக்கி வந்தான் என்றால், தன் திருவடி நடையால் வருந்துதல் தருமமாகுமோ அம்மானை; அத்திருவடி முன்னாளில் எம தருமனையே உதைத்த தன்றோ; ஆதலால், நடையால் வருந்தும் எண்மையானதன்று அம்மானை.

(வி

-

ரை ) பிணக்கு மாறுபாடு; பாண்டியன் இடைக் காடன் பாடலை மதியாமை; தீர்த்து வந்தான்; தீர்த்து உவந்தான்; இருவர் பிணக்குத் தீருங்கால் இடை நின்று தீர்த்தாருக்கு உவப்பு உண்டாமன்றோ! அவ்வுவகை இறைவற்கு உண்டாயிற்றாம். வாடுதல் - வருந்துதல்; இறைவன் தாள் மலரடியன்றே; அதன் மென்மைக்கு இரங்கி 'வாட' என்றார். வாடுதல் மலரின் தன்மை. தருமன் - எமதருமன்; 'உதைத்ததாள்' ஆகலின் வாடாது; உரமிக்கது என்றார்.

57. வலைவீசியது

(உமையம்மை ஒரு சாபத்தால் பரதவ (மீனவப் பெண்ணாகப் பிறந்தாள்; அவளை மணந்து சாபநீக்கம் தர இறைவன் வந்தான். அவன், கடலில் இருந்த சுறா மீனைப் பிடிக்க வலை வீசினான்)

வானோர் தொழுமதுரை வள்ளல் பரவனெனத் தானே வலைவீசும் தண்கடல்வாய் அம்மானை;