உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

தானே வலைவீசும் தண்கடல்வாய் ஆமாகில் மேனாள் விருப்பமுண்டோ மீனிலவற் கம்மானை;

மீனேகண் ணாள்மனைவி மீனவன்றான் அம்மானை.

(பொ ரை) விண்ணோர் வணங்கும் மதுரைக்கு இறைவனாம் சொக்கநாதன் பரதவன்போலத் தானே குளிர்ந்த கடலில் வலை வீசினான் அம்மானை; தானே குளிர்ந்த கடலில் வலைவீசினான் என்றால், முன்னாளிலேயே மீனில் அவனுக்கு விருப்பமுண்டோ அம்மானை; அவன் மனைவி மீனையே கண்ணாக உடையவள்; அவனோ மீனவனாக வந்தவன்; ஆதலால் அவனுக்கு மீனில் விருப்பமுண்டு அம்மானை.

(வி-ரை) பரவன் - பரதவன் (மீன்வலைஞன்); தண்கடல் வாய் - குளிர்ந்த கடலில்; மேல் நாள் - மேனாள் ; மீனில் + அவற்கு மீனிலவற்கு; மீனில் அவற்கு விருப்பம் இருந்தமையாலே தான் மீனாட்சியை மணந்தான் தானும் மீனவனாக (பாண்டியனாக) வந்தான். மேனாள் என்றமையால் பரதவனாக வந்ததற்கு முன்னே நிகழ்ந்ததைக் குறித்தல் வேண்டுமாகலின், பாண்டியனாக வந்தது குறிக்கப்பெற்றது. 'மீன் நிலவற்கு' எனக்கொண்டு பாண்டியனாக வந்த சிவனுக்கு எனப் பொருள் கொள்ளவுமாம்.

58. வாதவூரடிகளுக்கு உபதேசித்தது

(பாண்டியனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் குதிரை வாங்குவதற்குச் சென்றார். செல்லும் வழியில் திருப் பெருந்துறையில் இறைவன் குருவடிவில் காட்சி வழங்கி அருளுரை வழங்கினான்; வாசகர் குதிரை வாங்கக் கொண்டுபோன பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டார்.

வாதவூ ரற்கு மதுரேசர் பெருந்துறையிற் போதவுப தேசம் புகன்றனர்காண் அம்மானை; போதவுப தேசம் புகன்றனரே ஆமாகில்

காதலரைத் தங்குருவாக் காண்பரோ அம்மானை;

காணார்யார்; தங்குருவாக் காதலரை அம்மானை.

(பொ-ரை) திருவாதவூரடிகளாம் மாணிக்கவாசகருக்கு இறைவர் திருப்பெருந்துறையில் ஞானஉபதேசம் செய்தார்காண் அம்மானை; ஞானஉபதேசம் செய்தனரேயானால், தம் மைந்தராம் முருகனைத் தம் குருவாகக் கொள்வாரோ அம்மானை; தம் அறிவறிந்த மக்களைத் தம் குருவாகக் கொள்ளாத பெற்றோர்