உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

தாம் எவரோ அம்மானை.

-

223

(வி - ரை) போத உபதேசம் -ஞானமொழி, அருளுரை ; காதலர் மக்கள் ; இதனை விளக்கமாகக் 'காதற் புதல்வர்' என்றும், 'காதலஞ்செல்வர்' என்றும் கூறுவர். சிற்பி தான் செதுக்கிய சிலையைத் தானே வழிபடுவது போலத் தவத்தானும் அறிவானும் முதிர்ந்த மக்களைப் பெற்றோர் மதித்து வழிபடலும் அருளுரை கேட்டலும் கண்கூடாகலின் இவ்வாறு கூறினார்.இனிக் 'காதலரை யார் தங்கு உருவாக் காணார்' எனப் பிரித்து, எவரும் தம் காதலரைத் திருவுள்ளத்து அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகக் கொள்ளுதலையும் கொள்ளுக.

59. நரி பரியாக்கியது

இறைவன் திருப்பணியில் பொருளைச் செலவிட்ட மாணிக்கவாசகரை அரசன் நெருக்கினான்; சிறையிட்டான்; குதிரை ஆவணி மூலத்தன்று வருமென மணிவாசகர் அரசனுக்கு உரைத்தார். அவ்வாறே இறைவன் காட்டு நரிகளைச் சீரிய பரிகளாக்கிக் கொணர்ந்து காட்டினான்.)

பெரியமது ராபுரியிற் பேரானோன் பாண்டியன்முன் நரியைப் பரியாக்கு நற்றொழிலோன் அம்மானை; நரியைப் பரியாக்கு நற்றொழிலோன் ஆமாகில் அரியவித்தை கற்றவனுக் கன்னமரி தம்மானை; அன்னமொரு பக்கத் தமருமவற் கம்மானை.

(பொ ரை) பெருமைமிக்க மதுரையில் பேர்பெற்ற சொக்கநாதன் பாண்டியவேந்தன் முன் நரிகளைப் பரிகளாக்கும் நல்ல வித்தைக் காரனானான் அம்மானை; நரிகளைப் பரிகளாக்கும் நல்ல வித்தைக்காரனானால், அத்தகைய அரிய வித்தை கற்றவனுக்கு அன்னம் கிடைப்பதே அரிதாகுமே அம்மானை; ஆமாம்; ஆனால் அவனுக்கு அந்நிலைமையின்று; அன்னம் போன்ற உமையே அவன் ஒரு பக்கத்து அமர்ந்திருக்கும்போது அன்னம் அரிதன்றாம் அம்மானை.

(வி - ரை) 'அரியவித்தை கற்றவனுக்கு அன்னம் அரிது' என்பது ஒரு பழமொழி. நீங்காத தரித்திரம் உடையவர் அவரெனத் தனிப்பாடல் கூறும். ஆனால் அறம் வளர்க்கும் அ ன்னமாம் உமையோடிருப்பவனுக்கு அன்னம் அரிதோ என்றார். அன்னம் அரிது அன்னம் காணல் அரிது;

-