உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

பெண்சுமந்தோன் மண்சுமந்தான் பிட்டுக்காய் ஆமாகில் மண்சுமந்து மாற்றடியேன் வாய்ந்தனன்காண் அம்மானை மாவினைத்தீ மேலாக்கு வந்திதனால் அம்மானை.

225

(பொ-ரை) கங்கையாகிய நல்ல பெண்ணைத் தலையில் சுமந்த சொக்கநாதன் தண்மையைச் சுமந்துவரும் வையை யாற்றில் பிட்டுக்காக மண் சுமந்தான் அம்மானை; பிட்டுக்காக மண் சுமந்தான் என்றால், அவன் மண்ணைச் சுமந்து பாண்டியனால் பிரம்படியேன் பட்டான் அம்மானை; மாவைத் தீ மேல் வைத்து ஆக்கிப் பிட்டு வாணிகம் செய்யும் வந்தியினால் அம்மானை.

(வி-ரை) நன்னீர்ப் பெண் - கங்கையாம் பெண்; பெண்ணைச் சுமந்தவன் மண்ணையும் சுமக்க வந்தான் என நயம் காண்க. சுமக்க வந்த வையையும் 'தண்சுமந்த' வையை எனல் அறிக. மாறு மிலாறு; வளார்; பிரம்பு.

மாவினைத் தீமேல் ஆக்கும் வந்தி தன்னால் - மாவைத் தீமேல் வைத்துப்பிட்டு ஆக்கும் வந்தியினால்.

மா வினைத் தீ மேலாக்கும் வந்தி - பெரிய வினையாகிய தீயை அழித்து வீட்டின்பத்தை ஆக்கிக் கொள்ளும் வந்தி.

மா வினைத் தீ மேலாக்கும் வந்து இதனால் - இறைவன் மண் சுமக்கும் இதனால் பெரிய தீவினையை நீக்கி வந்திக்கு வீடுபேறு தரும்; வந்தி - மலடி; மகப்பேறற்றாள்.

62. பாண்டியன் சுரம் தீர்த்தது

ருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்தில் சமணர்களால் தீ வைக்கப் பெற்றது. அத்தீயைப் பாண்டியனுக்கு ஆகுமாறு சம்பந்தர் ஏவினார். பாண்டியன் சுரம் கண்டான்; இறைவன் அருளால் சம்பந்தர் பாண்டியன் சுரம் நீக்கினார்.)

தேசுமது ரேசன்கூன் தென்னவனுக் கன்றுதவப்

பூசுரனா லேசுரநோய் போக்கினான் அம்மானை; பூசுரனா லேசுரநோய் போக்கினான் ஆமாகில் மாசுரநோய் தீர்த்தவன்கூன் மாற்றானோ அம்மானை; மாற்றினான் கூனிலா வமிசமென் றம்மானை.

(பொ-ரை) ஒளி வடிவாம் சொக்கநாதன் பாண்டியனுக்கு வந்த சுரநோயை அந்நாளில் தவப்பேற்றால் வந்த திருஞான