உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் -38

சம்பந்தரால் போக்கினான் அம்மானை; திருஞானசம்பந்தரால் சுரநோய் போக்கினான் என்றால், கொடிய அச்சுரநோயைப் போக்கிய அவன் பாண்டியன் கூனையும் மாற்றானோ அம்மானை; கூனிலா வமிசம் என்று மாற்றினான் அம்மானை.

(வி-ரை) தவப்பூசுரன்; பூசுரன் - அந்தணன்; திருஞான சம்பந்தர்; கூன் - பாண்டியனுக்கு இருந்த கூனல்; கூன் பாண்டியன் என்பது அவன் பெயராயிற்று. கூன் மாறியபின் மாறவர்மன் அரிகேசரி, அழகிய பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பெயர்களைப் பெற்றான்.

கூனிலா வமிசம் கூன் இலா வமிசம்; கூனல் இல்லாத வமிசம்; கூன் நிலா வமிசம் வளைத்த நிலாவை முதலாகக் கொண்ட வழிமுறை; சந்திர வமிசம்; பாண்டியர் 'சந்திர குலம்' எனல் அறிக. 'பிறசமயம் புகுந்தான் என்னும் தலைக்குனிவு ல்லாத எனக் குறிப்பதுமாம்.'

63. சமணரைக் கழுவேற்றியது

(திருஞானசம்பந்தர் இறைவன் அருளால் பாண்டியன் சுரம் தீர்த்தார்; சமணர்கள் தோற்றுப் போயினர்; பின்னர் அனல் வாதமும் புனல் வாதமும் நிகழ்ந்தன; அவற்றிலும் தோல்வி கண்டனர் சமணர்; ஆகலின், ஒப்பந்தப்படி அவர்கள் கழுவேற்றப் பெற்றனர்.)

அன்றுசொக்கர் மெய்யருள்கண் டஞ்சிக் கழுவேறிப்

பொன்றினரெண் ணாயிரம்பேர் பொய்யமணர் அம்மானை; பொன்றினரெண் ணாயிரம்பேர் பொய்யமணர் ஆமாகில் நின்ற அமணருட னீறாமே அம்மானை;

நீறானார் நஞ்சுண்டார் நிச்சயத்தில் அம்மானை;

-

(பொ ரை) மெய்ந்நெறி விடுத்துப் பொய்ந்நெறி போற்றியவராகிய எண்ணாயிரம் சமணரும் அந்நாளில் சொக்கரின் மெய்யருள் வெளிப்பாடு கண்டு அஞ்சிக் கழுவில் ஏறி இறந்தனர் அம்மானை; எண்ணாயிரம் சமணரும் இறந்தன ரென்றால், அவர் போக எஞ்சியிருந்த சமணர் உடல் திருநீறு தாங்கியிருக்குமே அம்மானை; நஞ்சு உண்டவராகிய சிவனாரே