உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

227

முழு முதல்வர் என்னும் உறுதிப் பாடறிந்ததனால் திருநீற்றுக் கோலம் கொண்டனராம் அம்மானை.

-

(வி ரை) நின்ற - கழுவில் நின்ற; இறவாமல் இருந்த; பொன்றினர் - இறந்தனர்; நீறாமே-நீறு ஆமே; சாம்பல் ஆகுமே; திருநீறு அணிந்த கோலம் ஆகுமே; நிச்சயம் உறுதி; சிவமே மெய்ப்பொருள் என்னும் உறுதி. அமணர் -சமணர் ; 'அம்மணர்' என்னும் சொல்லின் தொகுத்தல். மதுரைக்கு மேல் பாலுள்ள மலையொன்றன் பெயர் 'அமணர்' மலை வழங்குவதறிக. அனல் வாதம் - தீயில் ஏடு எரியா திருத்தல்; புனல் வாதம் - நீரில் ஏடு எதிர்த்துச் செல்லுதல்.

மலை என

64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்தது

(திருப்புறம்பயத்தில் ஒரு திருமணத்தை நிகழ்த்தி வைத்தார் திருஞானசம்பந்தர். அப்பெண்ணைக் கண்டதும், மூத்தாள் அவள் திருமணம் முடியாமல் வந்து சேர்ந்தவள் என வசை புகன்றாள். இறைவன் அருளால், திருமணம் நடந்த திருப்புறம் பயக்கோயிலில் இருந்த வன்னி, கிணறு, லிங்கம் ஆகியவை முன்னே வந்து நின்று திருமணச் சான்று கூறின.)

சொன்னவணி கக்கொடிக்காச் சொக்கேசர் அங்கழைத்தார் வன்னி கிணறிலிங்கம் மாமதுரைக் கம்மானை; வன்னி கிணறிலிங்கம் மாமதுரைக் காமாகில் பன்னினர்தூ தேனோ பரவைமுன்சென் றம்மானை; பரவையே ழோடிவரப் பார்த்ததுமுண் டம்மானை.

(பொ

-

ரை) பெற்றோரால் உறுதி சொல்லப்பட்ட வணிகப் பெண்ணுக்காகச் சொக்கநாதர் திருமணச் சான்றாகத் திருப்புறம் பயத்தில் இருந்த வன்னி கிணறு இலிங்கம் ஆகிய வற்றை மதுரைக்கு அழைத்தார் அம்மானை; அவற்றை மதுரைக்கு அழைத்தாரானால், அத்தகைய செயல்வல்ல அவர் சுந்தரருக் காகப் பரவையாரிடத்துத் தாமே நடந்து சென்று தூது ஏன் கூறினார் அம்மானை; ஒரு பரவை என்ன அவர் கட்டளை யி ஏழு பரவையுமே (கடலுமே) ஓடிவரக் கண்டது உண்டு அம்மானை.