உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

கார்கொண்ட பொழில்மதுரைக் கர்ப்பூர

வல்லிமணங் கமழும் தெய்வத்

தார்கொண்ட கருங்குழல்அங் கயற்கண்நா

யகிகுறம்செந் தமிழால் பாட

வார்கொண்ட புகர்முகத்தைங் கரத்தொருகோட்(டு) இருசெவிமும் மதத்து நால்வாய்ப் போர்கொண்ட கவுள்சிறுகண் சித்திவிநா

யகன்துணைத்தாள் போற்று வாமே.

(தெளிவுரை) மேகம் தவழும் சோலைகளையுடைய மதுரையில் எழுந்தருளிய கர்ப்பூரக் கொடி போன்றவளும், மணம் கமழும் தெய்வத் தன்மை வாய்ந்த மாலையை அணிந்த கரிய கூந்தலையுடையவளும், அங்கயற்கண்ணி என்னும் பெயருடையவளும் ஆகிய ஒப்பற்ற தலைவியின் பெயரால் குறம் என்னும் நூலைச் செவ்விய தமிழால் யாம் பாடுதற்கு நெடுமை யமைந்த புள்ளிகளையுடை முகத்தையும் ஐந்து கைகளையும் ஒரு கொம்பையும் இரண்டு செவிகளையும் மூன்று மதங்களையும் தொங்கும் வாயையும் பொந்துபோல் அமைந்த கன்னத்தையும் சிறிய கண்களையும் உடைய சித்தி விநாயப் பெருமானின் இரண்டு திருவடிகளையும் போற்றுவேம்.

(அருஞ்சொற் பொருள்) கார் மேகம்; பொழில் சோலை; தார் - மாலை; குழல் - கூந்தல்; வார் -நீண்ட; புகர் - புள்ளி; கோடு - கொம்பு ; நால்வாய் - தொங்கும் வாய்; போர் பொந்து; கவுள் -கன்னம்; துணை - இரண்டு. அங்கயற்கண் நாயகி: அன்னையின் பெயர். சித்திவிநாயகன்: மதுரைத் திருக்கோயில் விநாயகர் பெயர்.