உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

ஒரு நூலகர்.

'ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் அமைக்க வேண்டும்" என எண்ணினார்.

பள்ளிக்கெனக் கட்டடம், குடிநீர் வாய்ப்பு தளவாடம் முதலாய அடிப்படை வாய்ப்பும் இல்லாத பள்ளிகளில் நூலகம் அமைத்தல் இயலுமா?

புதியதோர் திட்டம் அவர்க்கு உருவாகியது!

பள்ளிச் சீரமைப்புத்திட்டம் என்பது அது.

சீரமைப்புக்குத் தம் உதவி; பிறர் வழியே பெறும் உதவி என இருவகை உதவித் திட்டம் கொண்டார்.

தம் உதவியில் தம் உழைப்பு உதவியும் இருந்தது. அது பிறர் உழைப்பு உதவியையும் தானே தேடித்தந்தது. பத்தில் ஒரு பங்கே தம் ஊதியத்தில் தம் செலவுக்கெனக் கொண்டார்.

ஒன்பது பங்கும் பள்ளிச்சீரமைப்புக் கெனவே ஒதுக்கினார். பத்தில் ஒரு பங்கு கொண்டு வாழ முடியுமா?

இவ்வளவுக்குள்ளேதான் வாழ்வு என உறுதிகொண்டால்

யலாதா?

எளிமை எளிமை

-

-

உடை உணவு எல்லாம் எல்லாம்;

குடும்பம் பெருகினால் கொள்கை சுருங்குமே!

சுருங்காமல் என்றும் பெருகுவதற்காகக் குடும்ப வாழ்வை-

திருமணத்தையே துறந்தார்.

இந்த எளிமையும் துறவும் என்ன ஆயின!

சீரமைப்புச் செழுமை ஆயின!

பள்ளிக்குக் குடிநீர்; மின்விளக்கு; கரும்பலகை ; மேசை; நாற்காலி; கடிகாரம்; நூல்கள்; நிலைப்பேழை; விளையாட்டுப் பொருள்கள்; படங்கள் - இப்படி இப்படி ஆயின.