உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்ததுட் ரத்தம் பீரிட்டு காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது கூப்பிய கைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கண நேரம் ஆபாவின் கழுத்தில் பதிந்திருந்தது.

'ஹேராமா' என்று காந்தி முணுமுணுத்தார். மூன்றாவது குண்டு வெடித்து வெளி வந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைகள் பாதங்களை விட்டு நழுவிக் கழன்றன. ஆபா, மனு இரண்டு பேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி,பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்ந்தன. காந்தியின் கண்கள் பாதிமூடியிருந்தன. அவருடைய உடம்பில் இன்னமும் உயிர் இருக்கும் குறிகள் தென்பட்டன.

சற்றுமுன்பே மகாத்மாவை விட்டுச் சென்ற ஸ்ர்தார் படேல் மீண்டும் அவருக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார். காந்தியின் நாடியைப் பிடித்துப்பார்த்தார்.நாடி மிகவும் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருப்பதுபோல அவருக்குத் தோன்றியது மருந்துப் பெட்டியில் அட்ரினாலின் இருக்கிறதா என்று யாரோ ஒருவர் தேடிப் பார்த்தார். அதைச் சிறிதும் காணவில்லை.

கூட்டத்தில் ஒருவர் சரேல் என்று ஓடி டாக்டர் டி. பி. பார்க்கவாவை அழைத்து வந்தார். துப்பாக்கி சுட்ட பத்து நிமிஷத்துக்கெல்லாம் அவர் வந்து சேர்ந்தார். "உலகத்தில் உள்ள எதுவும் இனி அவரைப் பிழைப்பூட்ட முடியாது. அவர் இறந்து பத்து நிமிஷம் ஆகிவிட்டது” என்று டாக்டர் அறிவித்தார். இத்தகு கொடுமை ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே கயமை! என்னே கயமை! என்று நைந்தாரோ?

அதனால்,

"தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும்'

என்றாரோ?

செய்தி : மகாத்மா காந்தி வாழ்க்கை. பக். 2-3

""

லூயிஃபிஷர் ; தமிழ் தி. ஜ. ர.