உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ஒன்னார் அழுத கண்ணீர்

ஒரு பெரிய தொழிற்சாலை.

செயற்கை இழை உருவாக்கும் தொழிற்சாலை

உருபா 220 கோடித்திட்டம் என்றால் விளக்க வேண்டுமா? அடுத்த ஒரு திங்களில் ஆலை இயக்கமாம்.

இயக்கத்தின் முன்னே அமைப்பின் சீர்மையை ஆய்ந்து மதிப்பிடும் பணி.

இந்திய மாநிலங்கள் அனைத்தில் இருந்தும் பொறியில் வல்லார் தேர்ந்த வந்தனர்.

ஆலைக்குள்ளே பாடியமைத்துத் தங்கியிருந்தனர்.

இரவுப் பொழுது.

சுவர் மேல் ஏறி உள்ளே குதித்தனர் நால்வர்.

'திருடன் திருடன்' என்று கூவினர்.

பாடியில் உறங்கிக் கிடந்தவர் ஒலியைக் கேட்டு ஓடி

வந்தனர்.

கூச்சல் போட்டவர் கொடிய கருவிகளைக் கொண்டு இருந்தனர்.

கருவியைக் காட்டி வரிசையில் நிற்க வைத்தனர்.

அந்த மாநிலத்தாரை அப்பாற்படுத்தினர்.

அயல் நாட்டவரையும் அப்பாற்படுத்தினர்.

அயன் மாநிலத்தார் பதினைந்து பேர்கள்; அவர்களை வரிசையாய் நிறுத்தித் தாறுமாறாகச் சுட்டுக் கொன்றனர்.

வந்த வேலை முடிந்ததும் தப்பிச் சென்றனர்.

கொலை செய்ய வந்தவர்.

கூச்சல் போட்டனர்.