உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.

"சுமக்கமாட்டாச் சுவடிக் கட்டுடன் எங்கள் அகத்திற் கொருவர் வந்துளார்!

"சுவடிக் கட்டோடா? சுமக்க மாட்டா அளவிலா?

"ஆமாம்! அவ்வளவு சுவடியும் அருமையான பழைய

சுவடிகள்!

"அப்படியா! கல்லூரி வேளையாயிற்றே! அவரைப் பார்க்க

வேண்டுமே!

"வேண்டா வேண்டா; நீங்கள் பார்க்கவே வேண்டா; பார்க்க வந்தால் ஓடிப்போவார்;

எவர் என்பதைச் சொல்லவும் இல்லை;

ஏன் என்றும் சொல்லவும் இல்லை! எவரைப் பார்க்கவும் ஒப்பவும் இல்லை;

சுவடியைத் தக்க இடத்தில் சேர்க்க வேண்டும்

என்றே உங்களை நாடி வந்துளார்!

"வறியர் போலும்! தொகைமிகக் கேட்பரோ?

"தொகையைக் குறித்து வரவே இல்லையாம் உரிய த்தில் சேர்க்க வேண்டும் என்றே வந்தாராம்!

"கல்லூரி முடியும் வரை இருப்பாரா?"

"எங்கள் அகத்தில் இருக்க வைத்துளேன். சுவடியை எடுத்துச் சேர்த்த பின்னரேபோவார்

கல்லூரி முடிந்தது.

மாணவர் சுவடிச் சுமையைச் சுமக்கமாட்டா அளவில் கொணர்ந்தார்.

"இன்னும் உள்ளது" என்றார்.

"இன்னுமா” என்றார் சுவடி கண்டவர்.

முச்சுமை சுமந்தார் இளைஞர்.

"இச்சுவடி தந்தார்க்கு, எதுவும் விரும்பார்க்கு நன்றியாவது நான் சொல்ல வேண்டுமே" என்று நடந்தார் ஆசிரியர்.