உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்-39

என்ன விந்தை!

சுவடிக் குரியவர் இருந்த வீட்டில் இல்லை.

பேரும் சொன்னார் அல்லர்;

ஊரும் சொன்னார் அல்லர்.

முகமும் கருதார்; அகமும் கருதார்!

கடமையை முடித்தார்;

நடையைக் கட்டினார்!

சுவடி பெற்றவர் சொல்லிக்கொண்டார்;

"ஒற்றை யேட்டுக்கு என்னென்ன பாடுபட்டுளேன்;

நூற்றுக் கணக்கில் ஏடு;

தேடிவந்து நின்றதே வீட்டில்!

என்ன உள்ளம்! என்ன பெருமிதம்"

என்றே என்றே வியந்தார்.

வியந்தவர் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதர்!

ஏடு சுமந்து தந்த மாணவர் சாம்பசிவம் என்பார்.

நிகழ்ந்த இடமோ குடந்தை.

நிகழ்ந்த நாளோ 2-5-1900.

இல்லம் ஏலம் போடும் நிலைக்கு ஆட்பட்ட உடனே

"இந்த ஏடும் ஏலம் போய் விடக் கூடாது

""

என்று, ஓடிவந்து உதவிய வள்ளல் பெயரை எவரும் அறியார்!

இத்தகு வள்ளலை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று போற்றுதலாகி நின்றாரோ?

அதனால்,

"கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு”

என்றாரோ?

நல்லுரைக் கோவை உ.வே. சா. பக். 111 : 119