உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.

பலகணி ஓரம் குப்பைத் தொட்டி!

காற்றெலாம் நாற்றக் காற்று!

போதாக் குறைக்குப், பக்கத்து வீட்டார் எட்ட நின்றே குப்பையை வீசுதல்!

தொட்டிக்கு உள்ளும் புறம்பும் குப்பைக் காடு!

தொட்டிப் பக்கம், குழந்தைகளை 'வெளியே' விடுதல்! நாற்றம் தாங்காமல் நல்ல வகையில் சொல்லிப் பார்த்தார்! 'நமக்குத் தானே நலக்கேடு' என்றார்.

"உம் வீட்டிலா கொட்டினோம்;

உம் தொட்டியிலா கொட்டினோம்;

எங்கள் பக்கம் எதுவும் செய்வோம்; உம் வேலையைப் பாரும் என்றனர்.

மூக்கைப் பொத்திய அவர், வாயையும் மூடிக்கொண்டார். குப்பை கொட்டிப் போன பின்னரும், குழந்தைகள் வெளிக்குப் போன பின்னரும், அள்ளியும் துடைத்தும் தொட்டியில் போட்டார்!

ஒரு நாள் இரு நாள்கள் அல்ல!

பல நாள்கள் பல வேளைகள்!

பேசாப் பெருஞ்செயல் பெரிய வேலை செய்தது!

கரையா மனத்தைக் கரைத்தது!

நல்ல செய்கை நாண வைத்தது!

தொட்டிக்குள் குப்பை போனது!

குழந்தைகள் 'வெளி'க்குப் போக 'உள்ளே' போயினர்!