உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.

காது கேட்கவில்லையா? கவலை விடுக" என்றொரு து விளம்பரங் கண்டார்.

கேளாக் காது கேட்பது போலக் களிப்புற்றார்.

விளம்பரம் தந்த முகவரி இடத்தை, விளம்பிக் கேட்டு விரைந்தார்.

கேளாக் காது கேட்கு மென்ற கிளர்ச்சி இவர்க்கு மட்டுமா? கூடியிருந்த கூட்டம் கேட்டுக் கொள் என்று நின்றது. வரிசைப் படியே வருகென அழைத்தனர்.

கையின் அழைப்புக் கணத்தில் போய்விடும்!

வாயின் அழைப்பே நொடியில் வாய்த்துவிடும் என்றும்,

ஆர்வமுந்த அவ்வவர் வரிசையில் இருந்தனர்.

அழைக்க அழைக்கச் சென்றனர்.

முன்னே சொல்லிய முதியரும், முறையில் சென்றார்.

ஒலி வாங்கி ஓரிடம்!

ஒலிபெருக்கி ஓரிடம்!

ஒலிபெருக்கி உள்ள

இடத்தில் இருந்த இருக்கையில்

இருக்கச் செய்தனர்.

ஒலிபெருக்கிவாயின் பக்கல் காதை வைத்துக் கேட்கச்

சொல்லினர்.

சொல்லிய தொன்றும் கேட்க வில்லை!

கத்திய தொன்றும் எட்டவில்லை!

கடைசி முயற்சி!

ஈரடிவட்ட வெண்கல மணியில் சுத்தியல் கொண்டு,