உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

எட்டடி போட்டும் எட்டவிலை!

'கேட்டதா ஒலி' என்றனர், கையைக் காட்டி! 'இல்லவே இல்லை' என்றார் வாயால் 'காதுகேட்க வில்லையா; கவலை விடுக!

கேட்கவே கேட்காது" என்று கூறிவிட்டனர்.

காது கேளாப் பெரியவர் எத்தகு முயற்சியர்!

எழுத்துக் கடமையே பழுத்ததவமாய்க் கொண்ட உழைப்பின் முனைவர்!

அவர் எழுதிக் குவித்த நூல்கள் ஒருபது இருபதா? இருநூற்றுக்கு மேலே!

உரையா, கதையா, வரலாறா, தொகுப்பா, சமயமா எல்லாம் எழுதித் தள்ளினார்!

புலவர் வரிசைமட்டும் நாற்பதற்கு மேலே!

கழகப் புலவர் கருப்பக்கிளர் சு.அ. இராமசாமி என்பார் அவர். கழகத்தால் அவரும், அவரால் கழகமும் மாறி மாறிப் பெற்ற பேறுகள் தமிழ்ப் பேறுகள் ஆயின.

இத்தகும் வினைத் திறத் தொருவரை

வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே உழைப்பு என்னே உழைப்பு

டரை எண்ணா உழைப்பு என்ற வியந்து நின்றாரோ?

அதனால்

"மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பா டுடைத்து'

என்றாரோ?

"

(624)