உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.

காட்டு வழியிலோர் வீடு.

ஆம், ஒற்றை வீடு!

கணவன் மனைவி கைக்குழந்தை என்னும் மூவர் குடும்பம்.

கணவன் வெளியூர் போனமை அறிந்தான், ஒரு கள்வன்.

மூவரைத் துணையாய்க் கூட்டி வெவ்வேறிடங்களில் திருடி அங்கே வந்தான்.

தட்டினான் கதவை.

திறந்தாள்; பார்த்தாள் ; திடுக்கென்றாயது. "பசியாய் இருக்கிறது ; ஆக்கு சோறு" என்றனர்.

ஆக்காதிருக்க ஆகுமா?

ஒரு பெண்; நான்கு முரடர்.

ஆக்கினாள் ; படைத்தாள்!

தொட்டிலில் குழந்தை!

கட்டிலில் திருடர் கருத்து!

தொட்டில் குழந்தையின் தொடையில் கிள்ளினாள்.

‘வீர் வீர்' என்றே இரைந்தது.

இரைச்சல் பொறாமல் “அமர்த்து குழந்தையை" என்றான்.

அவருளும் இருந்த ஓர் இளகன்.

மேலும் கிள்ளினாள்!

"வீர் வீர்" "வீர் வீர்"

55

கத்திக் தொலைக்கிறது ; வெளியே போ" என்றனர்!

வெளியே வந்தவள், மண்ணெண்ணெய்ப் புட்டியும், தீப்பெட்டியுமாக வந்தாள்!