உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

கதவைப் பூட்டினாள்!

தெளித்தாள் எண்ணெய்!

உரசினாள் குச்சியை!

191

கூரை பற்றி எரிந்தது!

ஓட்டம் பிடித்தாள் காட்டு வழியில்! அடுத்துள் ஊரை நெருங்கினாள்;

காவல் நிலையம் கடிதில் புகுந்தாள்!

நிகழ்ந்ததை உரைத்தாள் காவல் படைஞர் சூழுமுன், சூழ்ந்த எரியில் கரிந்தே போயினர்!

பெண்மையின் வீறு ஊரூர்க்கும் பேச்சாய்க் கிடந்தது! தன்னந் தனிமையில் தன்னை இழக்கத் துணியாத் துணிவு என்னே துணிவு!

ஒருத்தியின் உள்ள உறுதி, கொள்ளைப் பகையை ஒழித்தே

விட்டது!

இத்தகு துணிவுக் காட்சியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே என்னே என்று வியந்துபோய் நின்றாரோ?

“உடைய ரெனப்படுவது ஊக்கம் ; அஃதிலார்

உடையது உடையரோ மற்று?'

(591)

என்றாரோ!

திருவில்லிபுத்தூர்ப்பக்கல் நிகழ்ந்த நிகழ்ச்சி ஈது.