உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

மாடு பிடிக்கத் தரகனை நாடிச் சென்றான் ஒருவன். தரகன் வீடு, தனியொடு வீடு.

தோட்டத்தின் ஊடே இருந்தது அது.

மாடு பிடிக்க வந்தவன் மடியில் பணத்தொடு வந்தான். பெட்டியில் வைக்க நம்பித் தந்தான்

முன்னும் பின்னும் மாடு பிடிக்கக் கொடுக்கத் தொடர்பு! தொடர்பு கருதிவந்தான், தொல்லையையா கருதுவான்? வீட்டுக்காரன் உள்ளம் தரசின் அளவில் அமைய வில்லை! தந்த தொகையெலாம் தனக்கே கொள் நினைத்தான். காட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பேசினான். விருந்து சிறப்பாய்ச் செய்தான்.

கட்டில் போட்டுப் படுக்கவும் வைத்தான்.

வெளியே போவது போலப் போனான்.

போவது சொல்லாமல் போதலை நினைத்துக் கட்டிலில் கிடந்தவன், கண்ணுறங்கா திருந்தான்.

சென்ற சிறிது பொழுதில் சிலரொடு வந்தான் தரகன். வாயிலுக்கு முன்னே நின்று, கட்டிலைக் காட்டிக் கடிதில் மறைந்தான்.

கூடை.

வந்தவர் கையில் மண்வெட்டி அரிவாள் கோடரி

படுத்துக் கிடந்தவன் பார்வையில் ஆள்கள் மறைந்ததும் மெல்லெனக் கிளர்ந்து வீட்டு முற்றத்து மரத்தின் மேலே ஏறி மறைந்து கொண்டான்.

ஆழக்குழியாய் ஆள்கள் தோண்டிக் கொண்டிருந்தனர்.