உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

193

வீட்டுத் திண்ணையில் வெறுமையாய்க் கிடந்த கட்டிலில், நேரங் கழித்து வந்த ஒருவன் உறக்க அயர்வில் படுத்தான்; உறங்கிப் போனான்.

குழியைத் தோண்டியவர் வேலையை முடித்துச் சொன்ன படியே கட்டிலில் கிடந்தவன் கழுத்தை ஒடித்துக் குழிக்குள் வைத்து மூடிப்போயினர்!

மரத்தின் மேலே ஏறி இருந்தவன் விடியும் பொழுதுக்கு முன்னே இறங்கி, விரைந்தே ஓடினான்.

காவல் படையை அழைத்துக் கொண்டு வந்தான்.

வந்த வணிகனைக் கண்டதும் திகைத்தான் தரகன். செத்தவன் எப்படி வந்தான்?

படத்திற்குப் போன மகனேன் இன்னும் வந்திலன்? திகைக்கு முன்னே, வீட்டுக் காவல் ஆயது;

தோண்டி மூடிய குழியைத் தோண்டி எடுத்தனர்! படத்திற்குப் போனவன், கிடைத்தான் அங்கே?

நினைத்தது என்ன? செய்தது என்ன? நிகழ்ந்தது என்ன? இத்தகு கொடுமைக் கொலைஞனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே என்னே என்று நொந்தாரோ?

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்

(319)

என்றாரோ?

நிகழ்ந்த நிகழ்வு - செவி வழிச் செய்தி.