உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தனிவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும்

வள்ளுவ மூல அலகு குடும்பமே. அக்குடும்ப விரியே ஊரும், உலகும். அக்குடும்ப உறுப்புகளுள் ஒன்றே தனி நபர் வாழ்வு.ஒவ்வோர் உறுப்பும் செவ்வைப்பட இயன்று செயல் படாக்கால் ஒரு பொறியோ ஊர்தியோ இயக்கமோ சீர்பட இயங்காமை போலவே, தனி வாழ்வு சீர்படாக்கால் மூல அலகாம் குடும்பமும் சீருறாது. அதன் விரியாம் ஊரும் உலகும் உயர்வெய்தா. ஆகலின், தனிவாழ்வுச் சிக்கல்களும் தீர்வுகளும் முதற்கண் காணல் இன்றியமையாததாம்.

தனி வாழ்வு என்பது பால்வேறுபாடு அற்றது; அகவை வேறுபாடு அற்றது; தொழில் துறை வேறுபாடு அற்றது செவ் நிலை அறிவு நிலை ஆகிய வேறுபாடுகளும் அற்றது. அதனதன் தனித் தன்மை குன்றாமல் குறையாமல் தக்காங்கு போற்றிக் கொண்டு குடும்பப் பொதுவுக்கு உறுப்பாகி ஊரும் உலகுமாக ஓங்குதலே குறியாகக் கொள்ளப் பெறுவதாம்.

ஒவ்வொரு தனிவாழ்வின் கூட்டமைப்பே குடும்ப வாழ்வும், பொது வாழ்வும் என்பது வெளிப்படை. அதனால், தனி வாழ்வின் தொகுதியே அவ்வாழ்வுகளாகவும், அவ்வாழ்வுளின் பகுதியே தனிவாழ்வாகவும் கொடுத்தும் கொண்டு விளங்கும் கருதத் தக்கதாம்.

நீடுவாழ்தல்

ணைவு

ஒவ்வொரு தனிவாழ்வும் நெடிது வாழ வேண்டும் என்றும், நோய்நொடி இன்றி வாழ வேண்டும் என்றும், வறுமை வாட்டல் இன்றி வாழவேண்டும் என்றும், புகழ் பெற வாழ வேண்டும் என்றும் எண்ணல் இயற்கை. அவற்றுக்கு ஐயமோ, தடையோ, எதிரிடையோ உண்டாயின் பழிப்பும் புலம்பலுமாக வாழ்வார் மிக்குளர். தாம் விரும்புவதற்கு மாறாகத் தம் வாழ்வியல் அமைதற்கு அடிப்படை என்ன, அச்சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று அமைந்து எண்ணி உறுதியாகச் செயல்பட்டால் எண்ணுவ எல்லாம் எண்ணியபடி எய்தி வெற்றி வாழ்வாக்க முடியும். அதற்கு அறிவறிந்து உடனாகி ஒன்றாகி வழிகாட்டும் ஆசிரியராகத் தெய்வப் புலவர் திகழ்ந்து வருகிறார்.

"வாழத் துடிக்கும் அன்பரே நீவிர் நெடிது வாழலாம்; அதற்குத் தடை எதுவும் இல்லை; தடை என்று ஒன்றுண்டானால் அது வெளியே இருந்து வந்ததோ வருவதோ அன்று; உமக்குள்ளாக