உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

215

என்று விடுவிக்கிறாரே வள்ளுவப் பெருந்தகை! எத்தகைய பெரியர் அவர்!

புகழாசையர்

சிலருக்குப் புகழ் நாட்டம் இருக்கிறது. புகழைத் தேடித் தேடி அலைகின்றனர். தேடுவார்க்கு அரியது புகழ்; தானே உரியாரைத் தேடி வரும் அது; அப்புகழ், தம்மைத் தேடி வரத்தக்க செயல்களைச் செய்தல் கடமையாகவும் அவற்றைச் செய்யாமல், அது கிட்டுமா எனத் தேடித் தேடித் திரிவார் பழிப்புக்கே டமாகின்றனர். முன்னே புகழ்வது போல் புகழ்ந்தாலும் அடுத்த நொடியிலேயே பின்னே சென்று இகழப்படுபவராகவே உள்ளனர்! “அவருக்குப் புகழ் இருக்கிறதே! இவருக்குப் பெருமை இருக்கிறதே; இன்னாருக்குச் சீரும் சிறப்பும் செய்கின்றனரே! என்னை எண்ணிப்பார்ப்பவர் - மதித்துப் போற்றுபவர் - இலரே என்று வெதுப்புபவர் அவ்வெதுப்பே மன நோயராக்கி விடப் புலம்பியும் திட்டியும் மேலும் மேலும் பழிக்கிடமே ஆகின்றனர்! நாளெல்லாம் அமைதியற்று, பிறப்பு பேற்றை இழந்தே போகின்றனர்

இத்தகையாரையும் எண்ணிப் பார்க்கிறார் வள்ளுவர். என்னே! இவர் இரங்கத் தக்க நிலை?' என உருகுகின்றார். ஒருசிறிதளவேனும் செவி சாய்த்துக் கேளாரா இவர்? கேட்டு நன்னிலை எய்தாரா இவர்? என இவர்க்காக, அவர் தவிக்கிறார். அதனால்,

“புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்”

என்கிறார்.

(237)

உலகத்தில் அழியாத ஒன்றே ஒன்று புகழ்; அதனை இயலாலும் செயலாலும் அறிவாலும் அடைதற்கு, அடைப் பாரில்லா வழியாய்க் கிடக்கவும், அதனைக் கருதாமல் வாளா புகழ் வருமென எண்ணிக்கிடக்கிறாரே இவர்; பழிச் செயல் களையே செய்து பண்பிலியாக வாழும் இவர், பாராட்டை எதிர்பார்த்துக் கிடக்கிறாரே! தம்மைப் பிறர் புறக்கணித்தற்கும் பழித்தற்கும் தம் இயல் செயல்களே காரணம் என்பதை அறியாராய் இகழ்வாரை நோகின்றாரே இவர்! இந்நிலையை மாற்றிப் புகழ்ப்பேறு இல்லாமைக்குத் தாமே காரணம் என்பதை இப்பொழுதறிந்து கொண்டால் கூட எதிர்