உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|216

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

காலமேனும் புகழுக்குரியதாக இருக்குமே" என்றெல்லாம் கரைகிறார். அவர் சிக்கலைத் தீர்த்தற்குரிய சீரிய வழியைச் செப்புப்பட்டமாய்த் தீட்டியும் வைக்கிறார்! உப்புமலை மேல் இருந்து உண்டாலும், அள்ளிப் போட்டுக் கொண்டால் தான் அதன் சுவை வாய்க்கும்!

பழிபரப்பர்

இனிப் பிறன் பழி கூறுகின்றானே; அவன் பெறுவதும் தான் என்ன? அவன் புகழா பெறுவான். அவன் செயல் என்ன, புகழுக்குரிய செயலா? சேற்றை வாரி இறைப்பவன் சேறுபடவே செய்வான்! சந்தனக் குழம்பை வாரி இறைப்பவன் அச்சந்தன நறுமணத்தையே பெறுவான்!

"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்"

என்கிறார்.

(186)

ஒருவனை எவன் பழிக்கத் தொடங்குகிறானோ, அவன் தன் பழியைப் பிறர் தேர்ந்து தேர்ந்து கூறுமாறு அப்பொழுதே தூண்டுகிறான் என்பது தெளிந்த செய்தியாம். பழிக்குப் பழி கூடுமா? குறையுமா? 'திறன் தெரிந்து கூறப்படும்.' என்கிறாரே! பெரிய பெரிய பழிகளெல்லாம் தெரிந்து தெரிந்து கூறப்படும் என்று எச்சரிக்கிறாரே! இவ் வெச்சரிக்கை இருபால் சிக்கல் தீர்ப்பாரே அல்லவோ

சேர்ந்தாரைக் கொல்லி

ஆறுவது சினம்' என்றார் ஒளவையார். சிறிதளவே உண்டாகும் மனவெப்பே சினம் (சின்+அம்). அதுவும் ஆறுதல் ஏறுமுகமாகாமல் இறங்கு முகமாதல் -வேண்டும் என்கிறார். ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்' என் என்னும் அருணகிரியர் வேண்டலுக்குத் தலைகளை எண்ணினரே அன்றி, அமைந்த முகத்தை எண்ணிப் பார்த்தனர் அல்லர்' அது 'தணிகை' என்னும் இடப் பெயரும் இயல்புப் பெயரும் ணைந்த பெயர் என்பதயும் எண்ணினர் அல்லர்.

சிலர் எதற்கும் எளிமையாகச் சினம் கொண்டு விடுகின்றனர். மிக எளிய ஒன்றையும் பெரிதாக எடுத்துக் கொண்டு வெட வெடத்தும் படபடத்தும் பேசுகின்றனர். கைந் நீட்டலும் கூடச் செய்து விடுகின்றனர். பின்னர் தேனை எண்ணிப் பார்த்து வருந்தவும் செய்கின்றனர். அச்சினத்தால் தாமும் வாரிக்கட்டிக்